SuperTopAds

உடப்பு கடற்கரையில் ஒதுங்கிய மர்மப் பொருள்!

ஆசிரியர் - Editor II
உடப்பு கடற்கரையில் ஒதுங்கிய மர்மப் பொருள்!

புத்தளம், உடப்பு சின்னக்கொலனி கடற்கரை பகுதியில் மிதக்கும் அமைப்பிலான இரும்புப் பொருள் கரையொதுங்கியுள்ளது.

அதனை கரைக்கு கொண்டு சேர்க்க முடியாத நிலையில் பொதுமக்களின் உதவியுடன் உழவு இயந்திரம் கொண்டு இழுக்கப்பட்டது.

இது சுமார் 12 அடி நீளத்தைக் கொண்டதாகவும், அதன் நிறை சுமார் 3,000 கிலோவிற்கும் அதிகமாக  இருக்குமென நம்பப்படுகிறது.

இது ஆழ்கடல் கப்பல்களில் உள்ளதாக இருக்குமென நம்பப்படுவதோடு, அதனோடு டயர் ஒன்றும் சிறிய வலையும் மீட்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு ஆங்கில எழுத்துகளும் காணப்படுகின்றது


Radio