SuperTopAds

விபத்தில் சிக்கிய பட்டதாரி மாணவி உயிரிழப்பு

ஆசிரியர் - Editor II
விபத்தில் சிக்கிய பட்டதாரி மாணவி உயிரிழப்பு

கொழும்பு, நாவல திறந்த பல்கலைக்கழகத்திற்கு முன்பாக உள்ள பாதசாரி கடவையில் இடம்பெற்ற விபத்தில் பட்டப்படிப்பை முடித்து வெளியேறவிருந்த மாணவி உயிரிழந்துள்ளார்.

பாதசாரி கடவையைக் கடக்க முயன்ற மாணவி மீது கெப் ரக வாகனமொன்று மோதியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த, பல்லேவெல, ஹுங்கமுவ பகுதியைச் சேர்ந்த 23 வயதான சக்குனி துவானி என்ற பொறியியல் பீட மாணவியே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் 

இதில் மிகவும் சோகமான விடயம் என்னவென்றால், தனது பட்டப்படிப்பை முடிப்பதற்கு இன்னும் சில நாட்களே இருந்த நிலையில் மாணவி இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய கெப் ரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மிரிஹான பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Radio