காவந்திஸ்ஸ யானையை துப்பாக்கியால் சுட்டவரென சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் கைது.

இலங்கையின் மிக உயரமான மற்றும் கம்பீரமான காட்டு யானையான 'காவன்திஸ்ஸ' (Kavantissa), வலது முன்னங்காலில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டுக் காயத்திற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 16 ஆம் திகதி உயிரிழந்தது.
கல்கமுவ பிராந்தியத்தில் சுற்றித் திரிந்த இந்த கம்பீரமான தந்த யானை, கடந்த செப்டம்பர் மாத இறுதியில் வலது முன்னங்காலில் துப்பாக்கிக் காயத்துடன் நொண்டியபடி நடப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து வனவிலங்கு திணைக்கள கால்நடை மருத்துவர்கள் செப்டம்பர் 24 முதல் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். காலில் இருந்த காயம் ஓரளவு குணமடைந்த போதிலும், சில நாட்களாக உணவை உட்கொள்ள மறுத்ததால் ஏற்பட்ட நீரிழப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக சியம்பலன்கமுவ பகுதியில் இந்த யானை சரிந்து விழுந்து உயிரிழந்தது.
அதனை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் காவன்திஸ்ஸ யானை மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை, வாஹல ஊழல் தடுப்புப் பிரிவு மற்றும் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் இணைந்து கல்கமுவ பகுதியில் நடத்திய கூட்டுத் தேடுதல் வேட்டையின் போது கைது செய்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கையின் போது, சந்தேக நபரிடமிருந்து இரண்டு துப்பாக்கிகள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.




