SuperTopAds

ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி விகாரமகாதேவி பூங்காவில் பிக்குகள் போராட்டம்

ஆசிரியர் - Editor II
ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி விகாரமகாதேவி பூங்காவில் பிக்குகள் போராட்டம்

.

கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி ஜனாதிபதி செயலகம் முன்பு பிக்குகள் நடத்திய போராட்டம் நீதிமன்ற உத்தரவையடுத்து அங்கிருந்து விலகி கொழும்பு விகாரமகாதேவி பூங்காவுக்கு சென்றநிலையில் அங்கிருந்து சத்தியாக்கிரகப் போராட்டத்தை தொடர்ந்து  வருகின்றனர்.

ஞானசார தேரரை விடுவிக்குமாறு புத்தசான அமைச்சின் செயலாளருடன் நேற்று மதியம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாகத் தெரிவித்த பிக்குகள், தமது போராட்டத்தை விகாரமகாதேவி பூங்காவிற்கு மாற்றியுள்ளனர்.

அத்துடன் நேற்று இரவு தங்குவதற்காக தற்காலிக கூடாரம் அமைக்க முயன்றபோது, பிக்குகளுக்கும் பொலிஸாருக்கும் இடையில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. 

கூடாரங்களை அமைக்க முற்பட்ட போது பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.  மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிக்குகள் குழுவினருக்கு இடையிலும் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.

எனினும், ஞானசார தேரர் விடுதலை செய்யப்படும் வரை போராட்ட இடத்தை விட்டு வெளியேறப் போவதில்லை என தித்தகல்லே ஆனந்தசிறி தேரர் தெரிவித்துள்ளார்.

Radio