SuperTopAds

ஆசிரியர்களான இரட்டை சகோதரிகள் படுகொலை

ஆசிரியர் - Editor II
ஆசிரியர்களான இரட்டை சகோதரிகள் படுகொலை

ஹபராதுவ, பிடிதுவ பகுதியில் சகோதரிகள் இருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த இருவரும் திருமணம் செய்யாத சகோதரிகள் என்பதுடன், இருவரும் ஓய்வுபெற்ற ஆசிரியைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் 86 மற்றும் 81 வயதுடைய சகோதரிகள் என தெரிவிக்கப்படுகின்றது. 

ஹபராதுவ பொலிஸாரின் தகவலின்படி, குறித்த இரு சகோதரிகளும் பிடிதுவ பகுதியில் விசாலமான காணியொன்றில் அமைந்துள்ள வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், அவர்களது வீட்டின் பின்புற முற்றத்தில் வெவ்வேறு இடங்களில் இருந்து இருவரின் சடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் ஹபராதுவ பொலிஸாருடன் காலி பிரிவின் குற்ற விசாரணைப் பிரிவினரும் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Radio