SuperTopAds

கிளிநொச்சி வேட்புமனுத் தாக்கல்: சிறிதரன் அடாவடியால் ஏனைய கூட்டுக்கட்சிகள் வாய்ப்பை இழந்தன!

ஆசிரியர் - Editor II
கிளிநொச்சி வேட்புமனுத் தாக்கல்: சிறிதரன் அடாவடியால் ஏனைய கூட்டுக்கட்சிகள் வாய்ப்பை இழந்தன!

கிளிநொச்சியில் பங்காளிக்கட்சிகளின் வேட்பாளர்களை தன்னிச்சையாக நிராகரித்துவிட்டு, தனி தமிழரசுக்கட்சி வேட்பாளர் பட்டியல் ஒன்றை சிவஞானம் சிறிதரன் நேற்று சமர்ப்பித்திருந்தார். கூட்டமைப்பின் தலைமையெடுத்த முடிவிற்கு மாறாக சிறிதரன் தன்னிச்சையாக இப்படி செயற்பட்டிருந்தார். ஏற்கனவே எட்டப்பட்டிருந்த இணக்கத்தை மீறி பங்காளிகளின் ஆசனங்களை சிறிதரன் வெட்டியபோது, மாவை சேனாதிராசாவின் கவனத்திற்கு அது கொண்டு வரப்பட்டது. இதையடுத்து மாவை சேனாதிராசா, 

சிறிதரனை தொடர்புகொண்டு பங்காளிக்கட்சிகளிற்குரிய ஒதுக்கீட்டை வழங்கவேண்டுமென அறிவுறுத்தியிருந்தார். இந்த நிலையில் நேற்று, புளொட், ரெலோ இரண்டையும் நீக்கிவிட்டு தனி தமிழரசுக்கட்சி வேட்புமனுவை சிறிதரன் தாக்கல் செய்தார். இதையடுத்து நேற்றிரவு தமிழரசுக்கட்சி, புளொட் தலைவர்களிற்கிடையிலான அவசர கலந்துரையாடல் நடந்தது. தமது சொல்லை மீறி சிறிதரன் நடந்துள்ளார், கிளிநொச்சியை இனி தமிழரசுக்கட்சி தனது கட்டுப்பாட்டில் எடுக்கும் என மாவை சேனாதிராசா புளொட்டிடம் உறுதியளித்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.