SuperTopAds

நற்பிட்டிமுனை மாணவிக்கு 5ஆவது முறையாகக் கல்வி நிதியுதவி வழங்கி வைப்பு

ஆசிரியர் - Editor III
நற்பிட்டிமுனை மாணவிக்கு 5ஆவது முறையாகக் கல்வி நிதியுதவி வழங்கி வைப்பு

நற்பிட்டிமுனை மாணவிக்கு 5ஆவது முறையாகக் கல்வி நிதியுதவி வழங்கி வைப்பு 

சமூக சேவையாளர் மஹ்முத் மாஜித் வாக்குறுதியை நிறைவேற்றினார் 

சா/த பரீட்சையில் சாதனை படைத்த அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலய மாணவிக்குக் காசோலை கையளிப்பு  

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, நற்பிட்டிமுனை கமு/கமு/அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலயத்தில் சாதாரண தரப் பரீட்சையில் உயர் சித்தி பெற்ற மாணவி அலியார் பாத்திமா அப்தா அவர்களுக்கு ரூபா 15,000 பெறுமதியான காசோலை இன்று (01)   உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.

எம்.எச்.கே. மார்க்கெட்டிங் பிரைவேட் லிமிடெட் (MHK Marketing Pvt Ltd) நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் பிரபல சமூக சேவையாளருமான மஹ்முத் மாஜித் அவர்கள், தான் ஏற்கனவே வழங்கியிருந்த வாக்குறுதியின் அடிப்படையில் ஐந்தாவது முறையாக இக் கல்வி ஊக்குவிப்பு நிதியுதவியை வழங்கி வைத்துள்ளார்.

 மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் மற்றும் அவர்களின் உயர்கல்விப் பயணத்திற்குச் சுமையின்றி உறுதுணையாக இருக்கும் உயரிய நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் இச் சமூக நற்பணியின் தொடர்ச்சியாகவே இந்நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

பாடசாலை வளாகத்தில் இடம்பெற்ற இக் கௌரவிப்பு நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சாதனை படைத்த மாணவியையும், உதவி வழங்கிய சமூக சேவையாளரையும் பாராட்டினர்.

Radio