SuperTopAds

இன்றைய நாள் எப்படி 02/09/2018

ஆசிரியர் - Admin
இன்றைய நாள் எப்படி 02/09/2018

இன்று!

விளம்பி வருடம், ஆவணி மாதம் 17ம் தேதி, துல்ஹஜ் 21ம் தேதி,
2.9.18 ஞாயிற்றுக்கிழமை, தேய்பிறை, சப்தமி திதி மாலை 5:44 வரை;
அதன் பின் அஷ்டமி திதி, கார்த்திகை நட்சத்திரம் மாலை 6:45 வரை;
அதன்பின் ரோகிணி நட்சத்திரம், சித்த, அமிர்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி
* ராகு காலம் : மாலை 4:30–6:00 மணி
* எமகண்டம் : மதியம் 12:00–1:30 மணி
* குளிகை : மதியம் 3:00–4:30 மணி
* சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : சுவாதி, விசாகம்
பொது : கிருஷ்ண ஜெயந்தி, கார்த்திகை விரதம், கிருஷ்ணர்,. முருகன், சூரியன் வழிபாடு.

மேஷம்: நல்லோரின் வழிகாட்டுதலால் நம்பிக்கை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். லாபம் சுமார். பெண்கள் அதிக விலையுள்ள பொருட்களை கவனமுடன் பாதுகாக்கவும்.திட்டமிட்ட பயணத்தில் திடீர் மாறுதல் செய்வீர்கள்.

ரிஷபம்: நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். முக்கியமான பணி எளிதாக நிறைவேறும். தொழில்,வியாபார வளர்ச்சியால் புதிய சாதனை படைப்பீர்கள். ஆதாயம் அதிகரிக்கும். பெண்கள் பொன் பொருள் வாங்க நல்யோகம் உண்டு.

மிதுனம்: எதிலும் முன்யோசனை செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். சராசரி அளவில் பணவரவு கிடைக்கும். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவுகளைத் தவிர்க்கவும். பெண்களுக்கு உடல்நலனில் அக்கறை தேவை.

கடகம்: வாழ்வில் புதிய அனுபவங்களை எதிர்கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் போட்டி குறையும். நிலுவைப்பணம் வசூலாகும். தாயின் தேவை அறிந்து நிறைவேற்றுவீர்கள். அரசியல்வாதிகள் பதவி பெற அனுகூலம் உண்டாகும்.

சிம்மம்: குடும்பத்தினரின் ஆலோசனையை ஏற்பது நல்லது. தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் அளவில் பணிபுரிவீர்கள். எதிர்பார்த்ததை விட லாபம் கூடும். பெண்கள் கலையம்சம் நிறைந்த பொருள் வாங்குவர். பிள்ளைகளால் உதவி உண்டு.

கன்னி: பணியில் பொறுப்பு அதிகரிக்கும். தொழில், வியாபாரம் தாமத கதியில் இயங்கும். லாபம் சுமாராக இருக்கும். சேமிப்பு பணம் திடீர் செலவால் கரையும். அரசியல்வாதிகள் சமரச பேச்சுவார்த்தையில் நிதானம் பின்பற்றவும்.

துலாம்: உங்கள் நற்பெயரை பாதுகாப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும்.. பணவிஷயத்தில் விழிப்புடன் இருக்கவும். பெண்கள் அதிக பயன் தராத பொருட்களை விலைக்கு வாங்க வேண்டாம். சகோதர வழியில் உதவி கிடைக்கும்.

விருச்சிகம்: கருணை மனதுடன் உறவினர்க்கு உதவுவீர்கள். தொழில், வியாபாரம் செழித்து வளரும். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். புதிய வாகனம் வாங்க நல்யோகம் உண்டு.

தனுசு: குடும்பத்தினர்கள் உதவிகரமாக நடந்து கொள்வர். தொழில், வியாபாரம் செழித்து வளர புதிய உத்திகளை பயன்படுத்துவீர்கள். ஆதாயம் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். பூர்வீகச் சொத்து மூலம் வருமானம் கிடைக்கும்.

மகரம்: குழப்பத்தால் பணி நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் லாபம் சராசரி அளவில் இருக்கும்..உறவினர் வகையில் திடீர் செலவு ஏற்படலாம். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். நேரத்திற்கு உணவு உண்பதால் உடல்நிலை சீராகும்.

கும்பம்: சிலரது பேச்சு உங்களை சங்கடப்படுத்தும். தொழில், வியாபாரம் செழித்து வளர கூடுதல் உழைப்பு தேவைப்படும். அளவான பண வரவு கிடைக்கும். வெளியூர் பயணத்தில் திடீர் மாறுதல் உண்டாகலாம். பெண்கள் குடும்பநலனுக்காக பாடுபடுவர்.

மீனம்: நிலுவைப் பணிகளை ஞாபகப்படுத்தி நிறைவேற்றுவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். உபரி வருமானம் கிடைக்கும். பெண்கள் குடும்பத்துடன் விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வர். வாழ்வில் இனிய அனுபவம் உண்டாகும்.