மத்திய கடற்றொழில் அமைச்சர் ஏமாற்றிவிட்டார், தொடரும் தென்னிலங்கை மீனவர்களின் அடாவடி..

ஆசிரியர் - Editor I
மத்திய கடற்றொழில் அமைச்சர் ஏமாற்றிவிட்டார், தொடரும் தென்னிலங்கை மீனவர்களின் அடாவடி..

யாழ்ப்பாணம் வடமராச்சி பகுதியில் சட்டவிரோத கடலட்டை தொழிலில் ஈடுபடும் தென்னிலங்கை மீனவர்கள் உள்ளூர் மீனவர்களது வலைகளை 

அறுத்து தெறிந்தமையால் நேற்றைய தினம் இரவு அப்  பகுதி மீனவர்களிடையே பதட்டமான சூழல் நிலவியது.

குறிப்பாக சட்டவிரோத கடலட்டை தொழில் செய்வோரை அங்கிருந்து வெளியேற்றுமாறு கடற்தொழில் அமைச்சர் கட்டளையிட்ட பின்பும் இது  

வரை எந்தவொரு கடலட்டை பிடிக்கும் தென்பகுதி மீனவரும் அங்கிருந்து வெளியேறவில்லை எனவும் அம் மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பாக வடமராச்சி கடற்தொழிலாளர் சமாசத்தின் தலைவர் வர்ணகுலசிங்கம் தெரிவிக்கையில்,

கடந்தமுறை கடற்தொழில் அமைச்சர் மற்றும் கடற்தொழில் நீரியல் வளத்துறையின் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் எம்மோடு நடாத்திய 

பேச்சுவார்த்தையின் போது சட்டவிரோதமாக கடலட்டை தொழிலில் ஈடுபடும் தென்பகுதி மீனவர்களை உடனடியாக வெளியேற்றுமாறு உத்தரவிட்டிருந்தார்.

ஆனால் தற்போது அவ்வாறு உத்தரவிட்டு மூன்று நாட்கள் கடந்துவிட்ட நிலையிலும் இதுவரையில் எந்தவித சட்டவிரோத மீனவர்களும் 

வெளியேற்றப்படவில்லை. மாறாக தற்போது அம் மீனவர்கள் எமது மீனவர்களது வலைகளை கடலில் அறுத்தெறிந்துள்ளனர்.

இதனால் எமது மீனவர்களது தொழில் நடவடிக்கைள் பாதிப்படைந்துள்ளது. நேற்றைய தினம் எமது மீனவர்கள் மிகவும் கொதிப்பான 

நிலையில் காணப்பட்டிருந்தார்கள். எனினும் நாம் அவர்களை சமாதானப்படுத்தி நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தோம்.

இந்நிலையில் இது தொடர்பாக யாழ்.கடற்தொழில் நீரியல்வளத்துறை பணிப்பாளருக்கு அறிவித்தால் அவர் தாம் நடவடிக்கை எடுக்க முடியாது என 

தெரிவிக்கின்றார். இவ்வாறான நிலையில் இவ் அரசாங்கம் தொடர்ச்சியாக எம்மை இவ்வாறே போலி வாக்குறுதிகளை வழங்கி ஏமாற்றப்பார்கிறது என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு