கிளிநொச்சி மாவட்டத்தில் கடும் வறட்சி, 33 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு..

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சி மாவட்டத்தில் கடும் வறட்சி, 33 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு..

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது காணப்படுகின்ற வரட்சி நிலமை காரனமாக சுமார் 33ஆயித்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமை நாயகம்அவர்கள் தெரிவித்துளளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது கடுமையான வரட்சி நிலை கானப்படுகின்றது இது தொடர்பில் மாவட்ட அரச அதிபரிடம்  இது பற்றிக் கேட்ட போது அதற்குப் பதிலளித்த அரச அதிபர், 

கிளிநொச்சி மாவட்டத்தில் மிக மோசமான வரட்சி இவ்வாண்டிலே வரலாற்றில் என்றுமில்லாத வாறு நிலவி வருகின்றது 

கடந்த ஆண்டு கூட போதிய நீர்வசதி இல்லாத போதும் மிகக் குறைந்தளவில் பயிர் செய்கைள் மேற்கொள்ளப்பட்டன.

இருந்த போதும் இந்தாண்டில் கூடுதலான பயிர்ச் செய்கையினை மேற்கொள்ள முடியும் என்ற ஒரு நம்பிக்கை விவசாயிகளிடம் இருந்தது.

எமது மாவட்டத்தைப் பொறுத்த வரையில் அறுபத்திஐந்து வீதமான மக்கள் விவசாயத்திலேயே தங்கியுள்ளனர் 

எனவே இந்த நிலமை காரணமாக மிக மோசமான ஒரு பாதிப்பே தற்போது கானப்படுகின்றது.

தற்போதுகுடி நீருக்கு கூடமிகமாhன தட்டுப்பாடு நிலவுகின்றது. இந்த அடிப்படையில்பிரதேச செயலாளர்கள் ஊடாக பெற்றுக் கொள்ளப்ட்ட படி 

பிரதேச செயலகங்கள் 'பிரதேச சபைகள்  தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை என்பவற்றின் மூலம் சுமார் ஒன்பதாயிரத்து 500குடும்பங்களுக்கு குடி நீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மேலும் மேலும் தேவைகள் அதிகரித்து வருகின்றன.இந்த  நிலமைகளை சமாளிக்கும் வகையில் இடர் முகாமைத்துவ அமைச்சினூடாக மேலதிக நிதிகளை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.

இது இவ்வாறிருக்க மாவட்டத்திலுள்ள கால் நடைகள் கூட தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக மிக மோசமாக பாதிக்கப்படுகின்றன.

இங்குள்ள குளங்கள் நீர் நிலைகள் வற்றி வருவதனால் கால் நடைகளின் தண்ணீர் தேவை கருதி இரணைமடு மற்றும் ஏனைய குளங்களின் ஊடாக நீர் திறந்து விடப்பட்டுள்ளன.

தற்போது வரட்சியினால் பொதுவாக விவசாயம் ஓரு புறம் நன்னீர் மீன் பிடித்தொழிலாளர்கள் ஒருபுறம் விவசாய நடவடிக்கைகளை நம்பியிருக்கும் தொழிலாளர்கள் ஒருபுறம் இவ்வாறு ஏறத்தாள 33ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 

என்று குறிப்பிட்டஅவர் இந்த நிலமை நீடிக்கும் போது தண்ணீர்த் தட்டுப்பாடு  வாழ்வாதார நிலமைகள் நோய்பரவுதல் உள்ளிட்ட பாரதூரமான விளைவுகளை இந்த மாவட்டம் எதிர் கொள்கின்ற 

சூழலில் இதனை எதிர் கொளவதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் என அவர்மேலும் தெரிவித்துள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு