காற்றினால் வீடு சேதமாகி 4 மாதங்களாகியும் கண்டுகொள்ளாத அதிகாரிகள்..
முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மீள்குடியேறிய பெண் தலைமைத்துவக்குடும்பம் ஒன்றிற்கு இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தினால்
அமைத்துக்கொடுக்கப்பட்ட நிரந்தர வீடு காற்றினால் சேதமடைந்து நான்கு மாதங்களைக் கடந்துள்ளபோதும் குறித்த வீடு புனரமைக்கப்பாத நிலையில் மேற்படி குடும்பம் வீட்டில் வாழமுடியாது காணப்படுகின்றது.
முல்;லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட மாங்குளம் கற்குவாரிக்கிராமத்தில் மீகுடியேறி வசித்து வரும் பெண்தலைமைத்துவக்குடும்பம் ஒன்றிற்கு இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தினால்
அமைத்துக்கொடுக்கப்பட்ட நிரந்தர வீடு உரிய முறையில் குறித்த ஒப்பந்தக்கார்களால் அமைக்கப்படாத நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் வீசிய காற்றினால் வீ;ட்டின் கூரை வீசப்பட்டு காணப்படுகின்றது.
இவ்வீ;ட்டினை புனரமைக்கக்கூடிய வசதி இல்லையென்றும் குறிப்பிட்ட வீட்டின் உரிமையாளரான பெண் இச்சேதமடைந்த வீட்டினை புனமைத்துத்தருமாறு கிராம அலுவலர் மற்றும் சம்மந்தப்பட்டவர்களிடம் கேட்டபோது இதுவரை
புனரமைத்துத்தரவில்லை என்றும் இந்தவீட்டில் இருக்கமுடியாதநிலையில் தற்போது கொட்டில் ஒன்றை அமைத்தே வாழ்ந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், மேற்படி புனரமைத்துத்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.