விக்னேஷ்வரனின் கோரிக்கையை பகிரங்கமாக நிராகரித்த இரா.சம்மந்தன்..

ஆசிரியர் - Editor I
விக்னேஷ்வரனின் கோரிக்கையை பகிரங்கமாக நிராகரித்த இரா.சம்மந்தன்..

வடகிழக்கு அபிவிருத்திக்கான ஐனாதிபதி செயலணியில் கலந்து கொள்வதால் அரசியல் தீர்வு முயற்சியில் பாதிப்பு உண்டாகப் போவதில்லை. என கூட்டமைப்பின் தலை வரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்மந்தன் கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறுகையில்,

ஜனாதிபதி செயலணியில் குறைகள் காணப்படுவதாக கூறிக்கொண்டு அச்செயலணியில் நேரடியாக பங்கேற்பதன் மூலம் குறைகளை சுட்டிக்காட்டி அதற்கான தீர்வுகளைக் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் இருக்கும் என்றே நாம் கருதுகின்றோம். 

அத்துடன் இச்செயலணியில் பங்கேற்பதையும் அரசியல் தீர்வுக்கு உதவக்கூடிய வகையில் சாதகமாக மாற்றியமைப்பதற்கு முயற்சிப்போம் என்ற நம்பிக்கையை கொண்டிருக்கின்றோம் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு