TNAக்கு எதிரான போட்டி தவிர்ப்பு ஒப்பந்தமும் தமிழ்த்தேசிய பேரெழுச்சியும்.
TNAஐ வீழ்த்துவதில் இருந்துதான் தமிழ் மக்களின் எதிர்காலத்தை உருவாக்கமுடியும்.
உள்நாட்டிலும், அன்டைநாடன இந்தியாவிலும், அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச அரங்கிலும் தமிழ்மக்கள் ஆதரவைக் கொண்ட தலைவர்களைத்தான் ஏற்றுக்கொள்வார்கள்.
தற்போது TNA அவ்வாறான ஆதரவை கொண்டுள்ளதால் சிங்கள ஆட்சியாளர் TNA தலைவர்களை விலைகொடுத்து வாங்கி அவர்களின் ஆதரவுடன் உள்நாட்டிலும், அண்டைநாட்டிலும், ஐநா உள்ளிட்ட சர்வதேச அரங்கிலும், தமிழருக்கு எதிரான இனவழிப்பு, போர்க்குற்றவிசாரணை ஊடாக ஈழத்தமிழருக்கு நீதி, தீர்வை தடுப்பதற்கான எமக்கெதிரான அனைத்து சூழ்சி அரசியலையும் முன்னெடுக்க முடிகிறது.
இன்நிலையில் வடகு கிழக்கு பிரிப்பை அரசியல்யாப்பு விதியாக கொண்ட தமிழர்கள் சுயநிர்ணய உரிமை என்ற வார்த்தையை பிரயோகித்தாலே தண்டனைக்குரிய குற்றம் என்ற வகையிலான அரசில் யாப்பை நல்லாட்சி அரசாங்கம் TNAன் ஆதரவுடன் நிறைவேற்றவுள்ளது. இன்று ரணில் தலைமையிலான UNP கட்சியின் ஒரு கிளையாக செயற்படும் சம்பந்தன், சுமந்திரன், சேனாதி தலைமையிலான TNAஐ வீழ்த்துவதிலிருந்துதான் தமிழ்மக்களின் விடிவிற்கான பயணத்தை இனி மேற்கொள்ள முடியும்.
இங்கு இந்த உள்ளூராட்சி தேர்தலில் ஒரே ஒரு இலக்கு TNA வீழ்த்துவதே, இந்த ஒற்றை இலக்கை அடைவதற்கான ஓர் ஐக்கியமுன்னனியை உருவாக்கும் முயற்சிகள் வெற்றியடையாத நிலையில் எம்மிடம் உள்ள இறுதி வழியாக “போட்டி தவிர்ப்பு ஒப்பந்தம் “ (non-contest pact) என்ற ஒரு வழி உண்டு.
போட்டி தவிர்ப்பு ஒப்பந்தம்
வடக்கில் வவுனியா மன்னார் தவிர்த்த ஏனைய பகுதிகளில் சைக்கிள் சின்னத்திற்கு உரியது என்றும் மன்னார் வவுனியா உதயசூரியனுக்கு உரியது என்றும் கிழக்கில் அம்பாறை தவிர்ந்த திருமலை மட்டக்களப்பு பகுதி சைக்கிள் சின்னத்திற்குரியது என்றும் அம்பாறை உதயசூரியனுக்குரியது என்றும் ஒரு போட்டி தவிர்ப்பு ஒப்பந்தத்தை மேற்கொண்டால் TNA ஐ வீழ்த்த வாய்ப்புண்டு. இந்த ஒப்பந்தம் மாவட்ட அடிப்படையில் மேற்கொள்வதில் ஏதாவது தடைகள் இருந்தால் அதனை தனித்தனியேயோ அல்லது உள்ளூராட்சி சபைகளின் அடிப்படையிலேயோ மேற்கொள்ள வாய்ப்புண்டு.
எப்படியோ TNA க்கு எதிரான வாக்குகளை சிதறா விடாது பேணி TNA ஐ தோற்கடிக்க இது ஒரு இறுதி வழியாகும்.
இவ்வகையில் TNA க்கு எதிரான நிலைப்பாட்டை அடிப்படையாக கொண்டு தமிழ்மக்களின் உரிமைகளை முன்னெடுக்கவல்ல ஒரு மாபெரும் தமிழத்தேசிய பேரலைபை இந்த தேர்தல்காலமான ஒன்றரை மாதங்களுக்குள் உருவாக்க முடியும். 3வயது குழந்தயிலிருந்து 90வயதுப் பாட்டிவரை மத்தளம், மேளம், உடுக்கு, மற்றும் இசைக்கருவிகளின் துணைகொண்டு தமிழிழ கிராமங்கள் எங்கும் சென்று தமிழ்த்தேசிய மக்கள் பேரலையை உருவாக்கலாம். இதன் மூலம் TNA ஐ வீழ்த்துவது மட்டுமன்றி ஜனநாயகத்தின் பெயரால் இந்தியா அமெரிக்க போன்ற நாடுகளின் ஆதரவை எம்பக்கம் திருப்பமுடியும் ஒருபோட்டி தவிர்ப்பு ஒப்பந்தமாவது கையில் இருந்தால்த்தான் தமிழ்மக்கள் இத்தகைய ஓர் தேசிய பேரலையை ஏற்படுத்த தயாராவார்கள்.
எதிரிகளை ஜனநாயக ரீதியில் வீழ்த்தவும் தமிழ்மக்களின் பண்பாடு கலை இலக்கியம் உள்ளிட்ட ஒரு தேசிய எழுச்சி ஏற்படுத்த இது ஒரு பெரும் வாய்ப்பாக அமையமுடியும்.