மாநகரசபையின் நிதி இல்லாமல் தியாகி திலீபனின் நினைவு தூபியை அமைப்பேன்..

ஆசிரியர் - Editor I
மாநகரசபையின் நிதி இல்லாமல் தியாகி திலீபனின் நினைவு தூபியை அமைப்பேன்..

யாழ்.மாநகரசபையின் பணம் பெறாமல் தியாகி தி லீபனின் நினைவு தூபி கட்டியெழுப்பபடும். என கூ றியிருக்கும் யாழ்.மாநகர முதல்வர் இ.ஆனோல்ட் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் நிதி ஒது க்கீட்டில் சுற்றுவேலி அமைக்கப்பட்டதைபோல் தூபி யும் புனரமைக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில்,

புலனாய்வாளர்கள் அச்சுறுத்தியமை உடன் எனது கவனத்திற்கு கோண்டுவரப்படவில்லை. பின்னரே தெரிவிக்கப்பட்டது. இதேநேரம் எவ்வாறு தூபி அமைப்பிற்கு நடவடிக்கை மேற்கொட்டோமோ அதன் பிரகாரம் சபை பணியாளர்கள் சம்மதித்தாலும் சம்மதிக்காவிட்டாலும் பணி இடம்பெறும். 

இதேநேரம் அச்சுறுத்தலினால் குறித்த பணி தாமதமடைவதாக சபை உறுப்பினர்களிற்கு தகவல் வழங்கப்பட்டிருப்பின் அத்தனை உறுப்பினர்களும் அந்த இடத்திற்கு வருகை தந்து பணியை தொடர்ந்திருக்க முடியும். எனத் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு