மனைவியின் துணையுடன் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு! - கிளிநொச்சியில் தனியார் கல்வி நிலைய உரிமையாளர் கைது

கிளிநொச்சி- தர்மபுரம் பகுதியில் இயங்கி வந்த தனியார் கல்வி நிலையத்தின் உரிமையாளர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு குறித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தனது மனைவியின் துணையுடன் கல்வி நிலையத்துக்கு கல்வி கற்க வந்த மாணவிகள் சிலருக்கு , பாலியல் தொந்தரவு கொடுத்தார், பாலியல் துஷ்பிரயோகம் செய்த முயற்சி செய்தார் என்று அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கைதுசெய்யப்பட்ட தனியார் கல்வி நிலைய உரிமையாளரை, எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கிளிநொச்சி பதில் நீதவான் சிவபாலன், நேற்றுஉத்தரவிட்டுள்ளார்.