முல்லைத்தீவு- துணுக்காய் பிரதேசத்தில் மட்டும் 720 குடும்பங்களுக்கு வீடுகள் இல்லை..

ஆசிரியர் - Editor
முல்லைத்தீவு- துணுக்காய் பிரதேசத்தில் மட்டும் 720 குடும்பங்களுக்கு வீடுகள் இல்லை..

முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்தில் 720 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் தேவைப்படுவதாக பிரதேச செயலகப்புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதுஇ

முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசசெயலர் பிரிவின் கீழ் உள்ள பிரதேசங்களில் மீளகுடியேறிய மக்களுக்கு பல்வேறு தேவைபபாடுகள் காணப்படுகின்றதாக பிரதேச செயலகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவதுஇ 720 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் அமைத்துக்கொடுக்கவேண்டியுள்ளதுடன் 25 குடும்பங்களுக்கு தனிநபர் மலசலகூடங்கள் போன்ற தேவைப்பாடுகள் காணப்படுகின்றன.

இதைவிட 24 வணக்கஸ்தலங்கள் புனரமைக்கப்0படவேண்டியுள்ளதுடன்இ இரண்டு முன்பள்ளிகளும் புனரமைக்கப்பட வேண்டும் என்றும் மூன்று சிறிய நீர்ப்பாசனக்குளங்களும் புனரமைக்கவேண்டிய தேவை காணப்படுவதாக 

தெரிவிக்கப்பட்டுள்ளது.

Radio
×