வாடிகள் எரிக்கப்பட்டமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரவிகரன் உதவி..

ஆசிரியர் - Editor I
வாடிகள் எரிக்கப்பட்டமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரவிகரன் உதவி..

முல்லைத்தீவு நாயாறு பகுதியில் வாடிகள் கொழுத்தப்பட்டதனால் பாதிக்கப்பட்ட தமிழ் மீன வர்களுக்கு 100 கிலோ அரிசியை வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் வழங்கியுள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் கிடைக்காத நிலையிலேயே ரவிகரன் வழங்கியுள்ளார். 

கடந்த 13ம் திகதி நாயாறு இறங்குதுறை பகுதியில் உள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான 8 வாடிகள் உள்ளிட்ட 50 லட்சம் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் எரித்து நாசமாக்கப்பட்ட து. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மீனவர்கள் கடந்த 3 நாட்கள் தொழிலுக்கு செல்லவில்லை.

இந்நிலையில் அவர்களுக்கு போதுமான உதவிகள் வழங்கப்படவில்லை. இந்நிலையை மக்கள் ரவிகரனின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் 100 கிலோ அரிசியை வழங்கியுள்ள ரவிகரன் மேலதிக உதவிகளை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக

கூறியுள்ளதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீட்டை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எ டுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.  


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு