யாழ்.மாநகர எல்லைக்குள் கடற்கரையோரங்களில் அமைக்கப்பட்ட கட்டிடங்கள் அகற்றப்படும்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகர எல்லைக்குள் கடற்கரையோரங்களில் அமைக்கப்பட்ட கட்டிடங்கள் அகற்றப்படும்..

யாழ்.மாநகர எல்லைக்குள் கடற்கரையோரங்களில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருக்கும் கட்டிடங்கள் நிச்சயமாக அகற்றப்படும். அந்த கட்டிடங்களில் வாழும் மக்களுக்கான மாற்று திட்டம் உருவாக்கிய பின்னர் அது செயற்படுத்தப்படும். 

மேற்கண்டவாறு யாழ்.மாநகர முதல்வர் இ.ஆனோல்ட் கூறியுள்ளார். இன்று நடைபெற்ற யா ழ்.பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின்போதே மாநகர முதல்வர் மேற்கண்டவா று கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், 

குருநகர் மட்டுமல்லாமல் யாழ்.மாநகரசபை எல்லைக்குள் உள்ள  சகல கிராமங்களிலும் சட்ட த்திற்கு மாறாக கட்டிடங்கள் அமைக்கப்படுகின்றன. ஆனால் அவை தொடர்பாக அந்தந்த கிராமங்களில் வாழும் நகரசபை உறுப்பினர்கள் சுட்டிக்காட்டுவதில்லை. 

காரணம் அவர்களுடைய வாக்கு வங்கி பாதிக்கப் படும் என நினைக்கிறார்கள். இந்நிலை யில் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட 23 கட்டிடங்கள் தொடர்பாக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளேன்.

மக்கள் நினைக்கிறார்கள் கட்டிட அனுமதிக்காக சென்றால் அங்கே அனுமதி தரமாட்டார்கள் என. ஆனால் அதில் உண்மையில்லை. 3 குழி நிலமாக இருந்தாலும், 4 குழி நிலமாக இருந்தாலும் மக்களுடைய தேவைகளை கருத்தில் கொண்டு 

நிச்சயமாக அனுமதிகளை வழங்க உச்சபட்ச நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் சட்ட விரோதமாக மக்கள் மட்டும் வீடுகளையும்,  கடைகளையும் கட்டவில்லை. யாழ்.மாநகரில் உள்ள பாரிய வர்த்தக நிலைய கட்டிடங்கள் பல 

சட்டத்திற்கு மாறாகவே அமைக்கப்பட்டிருக்கின்றன. அதற்காக எந்த அனுமதியும் பெறப்பட வில்லை. இங்கே யாரும் நடிக்கதேவையில்லை. மேலும் கரையோரங்களில் கட்டப்பட்டுள்ள சட்டவிரோத கட்டிடங்கள் நிச்சயமாக அகற்றப்படும். 

அதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. அதற்கு முன்னர் அந்த கட்டிடங்களில் உள்ள மக்களுக்கான மாற்று திட்டம் ஒன்றை நாம் உருவாக்கவேண்டியது கட்டாயமாகும். அந்த மாற்று திட்டம் வந்தவுடன் கட்டிடங்கள் அகற்றப்படும். 

இந்த கரையோரத்தில் உள்ள கட்டிடங்களுக்கு யாழ்.மாநகரசபை சோலை வரியில் கூட சட்ட த்திற்கு மாறாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது என்றார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு