நுண்கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் குறித்து அரசுடன் மீளவும் பேசுவோம்..
யாழ்.பிரதேச செயலக எல்லைக்குள் நுண்கடன் வழங்கும் நிதி நிறுவனங்களால் பெண்கள் பாதிக்கப்படுவது தொடர்பாக மீண்டும் அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடாத்தும். என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கூறியுள்ளார்.
யாழ்.பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று பிரதேச செயலக கேட்போர்கூட த்தில் இடம்பெற்றது. இதன்போது 1 லட்சத்திற்கும் குறைவான கடன்களை பெற்று அந்தக் கடனை திருப்பி செலுத்த இயலாத மக்களின் கடனை அரசு செலுத்தவுள்ளது.
இந்நிலையில் யாழ்.பிரதேச செயலக எல்லைக்குள் வாழும் மக்கள் தாம் பெற்ற கடன்களை குறித்து வெளியே சொல்வதற்கு அச்சப்படுகிறார்கள். எனவே மக்கள் பிரதிநிதிகள் இந்த விடயத்தில் கவனம் செலுத்தவேண்டும். என பிரதேச செயலக அதிகாரிகள் கூறியிருந்தனர்.
இதனை தொடர்ந்து இடம்பெற்ற கருத்து பரிமாற்றத்தின்போதே நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், தமிழ்தேசிய கூட்டமைப்பு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் அடிப்படையில்
1 லட்சம் வரையிலான நுண்கடன் பெற்றவர்களின் கடன்களை திருப்பி செலுத்த முடியாமல் இருந்தால் அதனை அரசாங்கம் தாங்கள் செலுத்துவதற்கு இணங்கியிருக்கிறது என கூறினார். இதன்போது யாழ்.மாநகர முதல்வர் கருத்து கூறுகையில்,
வாழ்வாதாரரீதியாக பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் தங்கள் தேவைகளுக்காக வங்கியில் கட ன் பெற்றிருப்பார்கள். அதனை நுண்கடன் நிறுவனங்களிடம் கடன் பெறும்போது குறிப்பி டுவதில்லை என கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராஜா கூடுதலான இடங்களில் கடன்களை பெற்றவர்கள் தொடர்பாக இந்த இடத்தில் நாங்கள் எதனையும் கூற இயலாது. அதனை அரசாங்கத்துடன் பேசியதன் பின்னரே கூற இயலும் என்றார்.
தொடர்ந்து யாழ்.மாநகர முதல்வர் இ.ஆனேல்ட் கூறுகையில், யுத்தம் உள்ளிட்ட பல்வேறு சூழல்களினால் பாதிக்கப்பட்டு குடும்ப தலைவர் படுக்கையில் இருப்பார். அவருடைய குடும்பம் நிறைந்த வறுமையில் இருக்கும்.
அவ்வாறான குடும்பங்களை பெண் தலமைத்துவ குடும்பங்களாக கணிப்பதில்லை. கணிக்க வும் முடியாது. அதனால் அவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படாமலேயே உள்ளது. எனவே மக்களு டைய தேவைகளை அறிந்து உதவிகள் செய்யப்படவேண்டும்.
இல்லையேல் மக்கள் குடும்ப வறுமையை போக்குவதற்காக கடன்களை பெறவேண்டியு ள்ளது என கூறினார். இந்த விடயம் குறித்து ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கெ hண்டிருந்த மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொது அமைப்புக்கள் சார்ந்தவர்கள்
கருத்து கூறுகையில். யாழ்.பிரதேச செயலக எல்லைக்குள் 32 நுண்கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் உள்ளன என்றால் ஒவ்வொரு குடும்பங் களும் 7 நிதி நிறுவனங்களில் மாட்டியிருக்கிறார்கள்.
இது பாரிய ஆபத்தாகும். வங்களில் அல்லது நிதி நிறுவனங்களில் கடன் பெற்றிருந்தால் அவர்களுக்கு மீளவும் கடன் கொடுக்ககூடாது என்பதை உறுதிப்படுத்தவேண்டும். இல்லை யேல் நுண்கடன் நிறுவனங்கள் வடக்கில் செயற்படகூடாது.
என நாங்கள் கேட்கவேண்டும். மேலும் நுண்கடன் நிறுவனங்களின் பணம் வசூலிப்பாளர்கள் மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்ளகூடாது. மேலும் கடன் வசூலிப்பதற்காக ம க்களுடைய வீடுகளுக்கு செல்வதும் நிறுத்தப்படவேண்டும் என வலியுறுத்தினர்.
இதன்போது ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், 1990ம் ஆ ண்டுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் வங்கிகள் கொடுத்த கடன்கள் மீள செலுத்தப்பட்டது. 90 வீதமான கடன்கள் மீள செலுத்தப்பட்டன.
அப்போது வங்கிகள் மக்களின் பணத்தை வைப் பிடுவதை மட்டும் இலக்காக கொண்டிருக் கவில்லை. மக்களிடமிருந்து பெற்ற பணத்தை நியாயமான தெளிவுபடுத்தல்களுடன் தொழில் மேம்பாட்டுக்காக வழங்கியிருந்தன.
ஆனால் இன்று அவ்வாறில்லை. அரச வங்கிகள் பணத்தை வைப்பிலிடுவதையே பெரிதும் செய்கிறார்கள். மக்களுக்கு ஒன்றும் செய்வதாக இல்லை. உண்மையில் அரச வங்கிகள் ஒழுங்காக செயற்பட்டிருந்தால் வடக்கில் நுண்கடன் வழங்கும் நிறுவனங்களின்
தேவை இருந்திருக்காது என்றார். தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதி ராஜா கூறுகையில், பெறுமனே யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல. வடமாகாணம் முழுவதும் இவ்வாறான பிரச்சினைகள் இருந்து கொண்டிருக்கின்றன.
மக்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். எனவே இங்கு பேசப்பட்ட இந்த நுண்கடன் தொடர்பான விடயங்களை பதிவு செய்து பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இi ணந்து திறைசேரி அதிகாரிகளையும் வைத்து பேசி தீர்மானங்களை எடுக்கலாம் என்றார்.