என்னுடைய நிபந்தனைகளை ஏற்றால் பதவி விலக நான் தயார்..

ஆசிரியர் - Editor I
என்னுடைய நிபந்தனைகளை ஏற்றால் பதவி விலக நான் தயார்..

அநீதியாக என்னை பதவி நீக்கம் செய்ய முதலமைச்சர் முயற்சித்தமையாலேயே நான் முத லமைச்சருக்கு எதிராக நீதிமன்றம் செய்றேன். இப்போதும் முதலமைச்சர் எனது 3 நிபந்தனை களை ஏற்றுக் கொண்டால் நான் பதவி விலக தயாராக உள்ளேன். 

மேற்கண்டவாறு அமைச்சர் பா.டெனீஸ்வரன் கூறியுள்ளார். வடமாகாணசபையின் 129வது அமர்வு இன்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றிருந்தது. இதன்போது அமைச்சர்கள் விடயம் தொடர்பாக எதிர்கட்சி தலைவர் சபைக்கு கொண்டுவந்த 

விசேட கருத்துரை மீதான விவாதத்தின்போதே அமைச்சர் பா.டெனீஸ்வரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், இங்கே உரையாற்றிய சிலர் முதலமைச்சர் மட்டுமா விட்டுக் கொடுக்கவேண்டும், 

ஏன் அமைச்சர் டெனீஸ்வரன் விட்டுக் கொடுத்து பதவி விலகினால் என்ன? என கேள்வி எழுப்புகிறார்கள். எந்தவிதமான குற் றச்சாட்டும் இல்லாமல் அநீதியாக என்னை பதவி நீக்கம் செய்வதற்கு முதலமைச்சர் முயற்சித் தமையினாலேயே நான் 

நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தேன். ஆகவே நான் விட்டுக் கொடுப்பதற்கு இயலாது. அதேவேளை முதலமைச்சர் தாம் செய்தது தவறு என்பதை பகிரங்கமாக ஒத்து க் கொள்ளவேண்டும். 

மேலும் முன்னாள் போராளிகளுக்கு உதவும் வகையில் நான் அமைச்ச ராக இருந்த காலத்தில் செய்த செயற்றிட்டங்களை நான் அமைச்சு பதவியிலிருந்து நீங்கிய பின்னர் கைவிட்டுள்ளார்கள். 

அதனை தொடர்ந்து செய்யவேண்டும். அடுத்ததாக மிக நீண்டநாட்கள் மிகுந்த சிரமப்பட்டு வடமாகாண போக்குவரத்து நேர அட்டவணை ஒன்றை தயாரித்திரு ந்தேன். அந்த நேர அட்டவணையும் கூட நான் அமைச்சு பதவியிலிருந்து 

நீங்கிய பின்னர் கைவிடப்பட்டிருக்கின்றது. அதனை தொடர்ந்து நடைமுறைப்படுத்தவேண்டும். இந்த 3 நிபந்த னைகளையும் நடைமுறைப்படுத்தினால் நான் இப்போதும் பதவி விலகுவேன். 

முதலாவது நிபந்தனையை முதலமைச்சர் நடைமுறைப்படுத்தாவிட்டாலும் மிகுதி 2 நிபந்தனைகளை நடைமுi றப்படுத்தினால் கூட நான் பதவி விலகுவேன் என்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு