தொடர் போராட்டத்தில் ஈடுபடும் முல்லைத்தீவு மீனவர்களை சந்தித்தார் முதலமைச்சர் சீ.வி..
முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத மீன்பிடி முறைகளை தடுத்து நிறுத்தக்கோரியும், சிங்கள மீனவர்களின் அத்துமீறல்களை தடுக்ககோரியும் போராட்டம் நடாத்திவரும் மக்களை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் சந்தித்து கல ந்துரையாடியுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் சிங்கள மீனவர்களின் அத்துமீறல்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி ஆகிய ன அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இவற்றை கட்டுப்படுத்தகோரி மக்கள் 6 வது நாளாக இன்றும் போராட்டம் நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் இன்று பிற்பகல் 3 மணிக்கு போரா ட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்ற முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் மக்களுடைய பிரச்சினைகள் குறித்தும் தேவைகள் குறித்தும் ஆராய்ந்தார்.
மேலும் மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் மக் களுடைய பிரச்சினை குறித்தும் தென்னிலங்கை மீனவர்கள் அத்துமீறலால் உண்டாகும் பாதிப்புக்க ள் குறித்தும் தெளிவுபடுத்தினார்.
இதன்போது கருத்து தெரிவித்த முதலமைச்சர் சீ.வி. விக்னேஷ்வரன் மத்திய கடற்றொழில் அமைச்சர் எதிர்வரும் 12ம் திகதி வருகை தரவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக இந்த பிரச்சினைகள் குறித்து
அமைச்சருடைய கவனத்திற்கு கொண்டுவருவதுட ன் உரிய தீர்வினை பெற்றுக் கொடுப்பதாக கூறியு ள்ளார்.