குற்றச் செயல்களை கட்டுப்படுத்த மாநகரசபை முதல்வர் பொலிஸாரை கோரவேண்டும்..
யாழ்ப்பாணக் குடாநாட்டில் தொடர்ந்தும் வாள் வெட்டு , கஞ்சா , கொள்ளை என்பன இரவில் இடம்பெற்ற நிலையில் பட்டப்பகலிலும் இடம்பெறுகின்றது. ஆனால் பொலிஸாரோ வேடிக்கை பார்க்கின்றனர்.
இதனால் மாநகர சபையும் குறித்த விடயத்தினை பொலிஸ் அத்தியட்சகரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் . என மாநகர சபையில் கோரப்பட்டது.
போரிற்குப் பின்னர் அதிகலிக்கும் போதைப்பொருள் பாவனை இன்று இளைஞர்களை அடிதடி , வாள்வெட்டு , கொள்ளை என அனைத்துப் பாதைகளிற்கும் இட்டுச் செல்கின்றது.
இந் நடவடிக்கை அண்மை நாட்களில் மீண்டும் அதிகரிக்கின்றன. இருப்பினும் எவருமே கண்டுகொள்ளவில்லை. அதாவது இதனை சட்ட ரீதியில் தடுத்து குற்றவாளிகளை கைது செய்யவேண்டிய பொலிசார் எடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் கேள்வி எழுப்பப்படுகின்றது.
அதாவது தற்போது மக்களிற்கு பொலிசார் மீதும் நம்பிக்கை இல்லாத நிலமையே காணப்படுகின்றது. அதன் காரணமாகவே பொலிசாருக்கும் தகவல் வழங்குகின்றனர். சிலர் இவ்வாறான நடவடிக்கையில் பொலிசாரும் உடந்தையாக இருக்கும் என்றே சந்தேகிக்கின்றனர்.
ஏனெனில் எங்கெல்லாம் சம்பவம் நடக்கின்றதோ அல்லது வாள் குழுவினர் நடமாடுகின்றனரோ அது தொடர்பில் பொலிசாருக்கு தகவல் வழங்கினாலும் சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருவதில்லை என மக்கள் குறை கூறுகின்றனர்.
ஆனால் கொள்ளை , அல்லது வாள் வெட்டுக் குழுவினரின் அசம்பாவிதம் இடம்பெற்று தாக்குதல்தாரிகள் சர்வசாதாரனமாக அங்கிருந்து வெளியேறிய பின்பு நடந்த சம்பவத்தை கணக்கெடுப்பதற்காகவா பொலிசார் வருகின்றனர்.
என மக்கள் கோருவதோடு மக்கள் பிரதிநிதிகள் இது தொடர்பில் என்ன செய்கின்றனர் . எனவும் கேள்வி எழுப்புகின்றனர். எனவே இது தொடர்பில் மாநகர முதல்வர் பொலிஸ் அத்தியட்சகரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். என கோரப்பட்டுள்ளது.