ஆணையிறவில் உப்பளம் அமைக்க மக்கள் எதிர்ப்பு...

ஆசிரியர் - Editor I
ஆணையிறவில் உப்பளம் அமைக்க மக்கள் எதிர்ப்பு...

ஆனையிறவு வெளியில் ஏ9 வீதிக்கு கிழக்காக மூன்று இடங்களில் உப்பளத்திற்கு நிலத்தை வழங்க மேற்கொள்ளும் முயற்சியை வன்மையாக கண்டிப்பதாக கிளிநொச்சி இரணைமடு விவசாயிகள் சம்மேளணச் செயலாளர் மு.சிவமோகன் தெரிவித்தார்.

இது தொடர்பில் இரணைமடு விவசாயிகள் சம்மேளணச் செயலாளர் மேலும் தெரிவிக்கையில் ,

ஆனையிறவு வெளியில் ஏ9 வீதிக்கு கிழக்காக உள்ள நீர்ப்பரப்பை நன்நீர் பரப்பாக மாற்றுவதன் மூலமே மாவட்டத்தின் தட்டுவன்கொட்டி ஊரியான் , உமையாள்புரம்  உள்ளிட்ட பல கிராமங்கள் நன்நீராக மாற்றமுடியும். அதற்காக நீண்ட முயற்சிகள் இடம்பெறுகின்றன. 

அதில் ஓர் அங்கமாக ஆறுமுகம் திட்டத்தை அமுல் படுத்த நடவடிக்கையும் இடம்பெறுகின்றது. இந்த நிலையில் தற்போது ஏ9 வீதிக்கு கிழக்கு புறத்தில் இரண்டு இடங்களில் 3 ஏக்கர் நிலம் வீதம் மொத்தம்ங6 ஏக்கர் நிலப்பரப்பு   உப்பு உற்பத்திக்காக  நிலத்தை வழங்க மேற்கொள்ளப்படுகின்றது.

குறிப்பாக உள்ளூர் அமைப்புக்கள் பிரதேச சபை என எவரின் அனுமதியும் இன்றி பிரதேச செயலாளர் நேரடியாகவே குறித்த அனுமதியினை வழங்கியுள்ளார். அதற்கான சான்று ஆவணங்களும் உண்டு. இவ்வாறு மாவட்ட மக்களினது குறிப்பாக 

அந்தப் பிரதேச வாழ் மக்களின் ஓர் கருத்தை அறியாமல் அப்பகுதியில் வருமானம் ஈட்ட முடியும் என்பதற்காக தொடர்ந்தும் அப் பகுதியை அழிப்பது மட்டுமன்றி சுற்றுப் புறங்களையும் உவர் ஆக்கும் தொழிற்சாலை தேவைதானா என்பதனையும் சிந்திக்க வேண்டும். 

இதேநேரம் குறித்த உப்பளங்கள் அமைப்பதும் முக்கியமான பணியெனக் கண்டறியப்பட்டால் ஏ9 வீதிக்கு மேற்குப் புறத்தில் அந்த நிலங்களை வழங்க நாம் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஏனெனில் ஆறுமுகம் திட்டத்தின் கீழ் இப் பகுதியில் நன்நீரை மறித்து அதன் மூலம் உவர்தன்மையை போக்குவதே எமது பிரதான இலக்கு . என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு