சிங்கள மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து நாளை முல்லைத்தீவில் போராட்டம்..

ஆசிரியர் - Editor I
சிங்கள மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து நாளை முல்லைத்தீவில் போராட்டம்..

தென்னிலங்கை சிங்கள மீனவர்களின் அ த்துமீறல்களை கண்டித்தும், சிங்கள மீனவ ர்களுக்கு ஆதரவாக செயற்படும் மாவட்டக் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணை க்களத்தை கண்டித்தும் நாளை முல்லைத்தீவில் போராட்டம் நடத்தப்படவுள்ளது.

தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும் தென்னிலங்கை மீனவர்களால் செய்யப்படும் சட்டவிரோத தொழில்களை கட்டுப்படுந்தகோரியும் கடந்த மாதம் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர். 

இதன்போது தென்னிலங்கை மீனவர்களுடைய அத்துமீறல் கட்டுப்படுத்தப்படுவதுடன் சட்டவிரோத தொழில்களும் கட்டுப்படுத்தப்படும் என கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களம் வாக்குறுதியளித்திருந்தது.

வாக்குறுதி அளிக்கப்பட்டதற்கு மாறாகவே கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களம் செயற்படுவதாக குற்றஞ்சாட்டியிருக்கும் மாவட்ட மீனவர்கள் நேற்று விசேட கலந்துரையாடல் ஒன்றை மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனுடன் இணைந்து நடாத்தியிருந்தனர். 

மேற்படி கலந்துரையாடலிலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.  இது குறித்து மாகாணசபை உறுப்பினர் து. ரவிகரன் ஊடகங்களுக்கு தகவல் தருகை யில், கடந்த மாதம் மீனவர்கள் நடாத்தியிரு ந்த கவனயீர்ப்பு போராட்டத்தின்போது கட ற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களம் மீனவர்களுக்கு வாக்குறுதி கொடுத்திருந்தது. 

எமக்கு முன்னிலேயே அந்த வாக்குறுதி கொடுக்கப்பட்டது.  ஆனாலும் அந்த வாக்குறுதிகளை திணைக்களம் சிறுதளவும் நிறைவேற்றாத நிலையில் இன்று மீனவர்கள் கூடி ஆராய்ந்திருந்தனர். இதன்போது மீளவும் கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதென தீர்மானம் எடுத்துள்ளோம். 

மீனவர்களை பொறுத்தளவிலும் எம்மை பொறுத்தளவிலும் இதனை தவிர வேறு வழியில்லை என்றார்.



பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு