சிங்கள மீனவர்களுக்கு ஆதரவாக செயற்பட்ட முல்லைத்தீவு கடற்றொலில் திணைக்களம் முற்றுகை..

ஆசிரியர் - Editor I
சிங்கள மீனவர்களுக்கு ஆதரவாக செயற்பட்ட முல்லைத்தீவு கடற்றொலில் திணைக்களம் முற்றுகை..

முல்லைத்தீவு மாவட்டத்தில் தென்னிலங்கை மீனவர்களால் பிடிக்கப்பட்ட பெருமளவு மீன்களை தென்னிலங்கை மீனவர்களிடமே கொடுக்க கடற்றொழில் நீரியல்வளதுறை திணைக்களம் முயற்சித்துள்ளது.

இதனை கண்டித்து முல்லைத்தீவு மீனவர்கள் இன்று இரவு மாவட்ட கடற்றொழில் நீ ரியல்வளத்துறை திணைக்களத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடாத்தியுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தென்னிலங்கை மீனவர்களினால் நேற்று பெருந்தொகை மீன்கள் சட்டத்திற்கு மாறான கடற்றொழில் முறைகளை பயன்படுத்தி பிடிக்கப்பட்டுள்ளது.

 இந்த மீன்களை குளிரூட்டப்பட்ட வாகனங்களில் கொண்டு செல்லும்போது பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றி மாவட்ட கடற்றொழில் திணைக்கள த்திடம் ஒப்படைத்துள்ளனர்.

இதனை அறிந்து மீனவர்கள் கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்திற்குச் சென்றிருந்தபோது அங்கு மீன்களை பிடித் த தென்னிலங்கை மீனவர்கள் சிலர் கடற் றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தில் நின்றுள்ளனர். 

இதனை அவதானித்த மீனவர்கள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனுடன் இணைந்து நீரியல்வள த்துறை திணைக்களத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

இது குறித்து மாகாணசபை உறுப்பினர் து. ரவிகரனுடன் தொடர்பு கொண்டு கேட்போ து சுமார் 10 ஆயிரம் கிலோ மீன் சட்டத்திற்கு மாறாக டைனமைற் பயன்படுத்தி பிடிக்கப்பட்டுள்ளது.  

இந்த மீனையும் அதனை பிடித்தவர்களையும் கைது செய்ய வேண்டிய பொறுப்பு கடற்றொழில் நீரியல்வளத்து றை திணைக்களத்திற்கு உரியது ஆனால் அவர்கள் அதனை செய்யவில்லை. 

இந்நிலையில் விசேட அதிரடிப்படையினர் அதனை செய்துள்ளனர். அதனையும் பிடி த்தவர்களிடமே திரும்பி கொடுப்பதற்கு முயற்சிப்பதாக மக்கள் சந்தேகிக்கின்றனர். இந்நிலையிலேயே மக்கள் 

கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தை முற்றுகையிட்டுள்ளனர் மக்களுடைய சந்தேகம் நியாயமானதே என்றார்.



பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு