ஊஞ்சல் கயிறு கழுத்தில் சிக்கியதில் சிறுவன் உயிரிழப்பு..
கிளிநொச்சி- முழங்காவில் அன்புபுரம் கிராமத் தில் ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்த 13 வயது சிறுவன் கழுத்தில் கயிறு இறுகியதால் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளான்.
குறித்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவ தாவது,
3 பெண் சகுாதரிகளிற்கு மூத்த பிள்ளையான குறித்த சிறுவன் பாடசாலை முடித்து வீடு திரும்பி இரு தங்கைகளுடன் விளையாடி உள் ளான்.
வழக்கமாக அந்த இடத்தில் சிறுவன் விளையா டுவான் என்பதால் தாம் அது குறித்து பெரிதுப டுத்தவில்லை என பெற்றோர் கூறினர்.
இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள கொய்யா மரம் ஒன்றில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சல் கயிற்றில் கழுத்தை சுற்றி சிறுவன் விளையா டியுள்ளான்.
இதன்போது கயிறு தொண்டையை இறுக்கிய நிலையில் குறித்த சிறுவனின் சகோதரி தனது தாயாருக்கு ஓடி சென்று கூறியுள்ளார்.
இதன் பின் தாயார் அயலவர்களின் உதவியுடன் சிறுவனை மீட்டு வைத்திய சாலைக்கு கொண்டு சென்றபோதும் சிறுவன் உயிரிழந்துள்ளான்.
உயிரிழந்த சிறுவனின் உடல் தற்போது முழங் காவில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.