353 புதிய ஆசிரியர்களுக்கு ஆகஸ்ட் 1ம் திகதி நிரந்தர நியமனம்..

ஆசிரியர் - Editor I
353 புதிய ஆசிரியர்களுக்கு ஆகஸ்ட் 1ம் திகதி நிரந்தர நியமனம்..

வடக்கு மாகாணப் பாடசாலைகளில் நிலவிய வெற்றிடங்களிற்காக இடம்பெற்ற நேர்முகத் தேர்வில் தேர்வானவர்களிற்கான ஆசிரிய நியமனம் எதிர்வரும் ஓகஸ்ட் 1ம் திகதி வழங்க ஏற்பாடு செய்யப்படுவதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார்.

இது தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் விபரம் தெரிவிக்கையில் ,

வடக்கு மாகாணத்தின் 12 கல்வி வலயத்திலும் உள்ள பாடசாலைகளில் கானப்படும் தமிழ் , குடியியல் , வரலாறு மற்றும் தகவல் தொழில்நுட்பம். , இரண்டாம் மொழி சிங்களம் போன்ற பாடங்களில் நிலவும் 353 பாட வெற்றிடங்களையும் நிரப்பும் நோக்கில் விண்ணப்பங்கள் கோரப்பட்டு எழுத்துப் பரீட்சைகள் இடம்பெற்றன. 

அவ்வாறு இடம்பெற்ற இரு வினாத.தாள்களிலும் 40 புள்ளிகள் வீதம் 80 புள்ளிகளிற்கு மேல் புள்ளிகளை பெற்ற பட்டதாரிகளையே செயல்முறை நேர்முகத் தேர்விற்கு அழைத்திருந்தோம். இதேநேரம் எழுத்துப் பரீட்சையில் ஓர் பாடத்தில் 40 புள்ளிகளிற்கு குறைவாக பெற்று இரண்டாம் வினாத்தாளில் அதிக புள்ளியை பெற்றதனால் 80 புள்ளிகளைப் பெற்றாலும் அவர்கள் சித்தி எய்தியதாக கணிக்கப்பட மாட்டார்கள். 

இந்த வகையில் தற்போது இடம்பெற்ற நேர்முகத் தேர்வுகளின் அடிப்படையில் தகுதியானவர்களிற்கு நியமனம் வழங்குவதற்கான அனுமதிகள் பெறப்பட்டதற்கு இனங்க தற்போது குறித்த பட்டதாரிகளில் 353 பேருக்கு ஆசிரிய நியமனம் வழங்கப்படவுள்ளது.

இவ்வாறு நியமனம் வழங்கப்படும் ஆசிரியர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தின் கடல் கடந்த தீவுகளிற்கும் வடமராட்சி கிழக்கின் சில பாடசாலைகளிற்கும் நியமிக்கம்படும் அதேவேளை அதிக நியமனங்கள் வன்னிப் பகுதியில் உள்ள பாடசாலைகளிற்கே நியமனம் பெறுவர் என்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு