இ.போ.ச பேருந்து பொன்னாலையில் விபத்து, மயிரிழையில் உயிர்தப்பிய பயணிகள்..

யாழ்ப்பாணத்தில் இருந்து காரைநகருக்கு சென்றுகொண்டிருந்த 786 இலக்க பஸ் இ.போ.ச. பஸ் பொன்னாலை பாலத்தில் குடைசாய்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
வேக கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியை விட்டு விலகிய பேருந்து குடைசாய்ந்து குடிநீர் விநியோக குழாய் பொருத்தப்பட்ட தூணில் தாங்கி சரிந்து நின்றது.
இச்சம்பவத்தில் பஸ்ஸில் பயணித்த மக்கள் மயிரிழையில் தப்பினர்.