யாழ்.நீர்வேலியில் குரங்குகள் அட்டகாசம்..

யாழ்ப்பாணம் நீர்வேலி வடக்கு கேராளிவத்தை பகுதியில் இன்று திடீரென குரங்குகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் புரிந்தன.
கிட்டத்தட்ட 10 குரங்குகள் வரை பாய்ந்து திரிந்து அப்பகுதி மக்களின் தென்னை மரங்களின் குரும்புகளை சேதப்படுத்தியதுடன் மாமரங்கள்
மாங்காய்களை புடுங்கி சேதப்படுத்தியது. வீடுகளிற்கு மேல் ஏறி பாய்ந்து ஓடியமையால் இதையடுத்து அப்பகுதி மக்கள் வெடி கொளுத்தி துரத்தினர்.
கூடுதலாக குரங்குகள் நடமாட்டம் தென்மராட்சி, மீசாலை, கொடிகாமம், சாவகச்சேரி இடங்களிலேயே உள்ள நிலையில் நீண்ட காலங்களின் பின்னர் இன்று நீர்வேலி பகுதிக்குள் நுழைந்துள்ளன.