குருவிச்சைநாச்சியார் ஆற்றுப்பாலத்தடியில் மக்கள் சந்திப்பு..

ஆசிரியர் - Editor I
குருவிச்சைநாச்சியார் ஆற்றுப்பாலத்தடியில் மக்கள் சந்திப்பு..

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் உள்ள குருவிச்சைநாச்சியார் ஆற்றுப்பாலத்தடியில் மக்கள் சந்திப்பொன்று கடந்த 2018.07.21 அன்று நடைபெற்றுள்ளது.

மக்களின் அழைப்பில் அவ்விடத்திற்கு வருகைதந்த ரவிகரன் மறுசீரமைக்கப்பட்ட பாலத்தையும் ஆற்றோடு இணைந்த வீதியையும் மக்கள் சார்பாளர்களுடன் இணைந்து பார்வையிட்டார்.

இது தொடர்பில் மேலும் அறியவருகையில்,

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் உள்ள குருவிச்சை நாச்சியார் ஆற்றுப்பாலமானது முன்னர் சேதமடைந்து காணப்பட்டது.

குறித்த பாலத்தையும் அதனோடு இணைந்த சுமார் 750மீற்றர் வீதியையும் சீரமைத்து தரும்படி அப்பகுதி உழவர்கள் வடமாகாணசபை உறுப்பினர்  துரைராசா – ரவிகரனிடம்  கோரினர்.

அதற்கமைய இந்தப்பாலம் மறுசீரமைக்கப்பட்டிருப்பதோடு வீதியும் சீரமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ரவிகரன்  கருத்துத் தெரிவிக்கையில்,

சேதமடைந்து காணப்பட்ட குருவிச்சைநாச்சியார் ஆற்றுப்பாலத்திற்கு அப்பால் சுமார் இருநூற்று ஐம்பதிற்கு மேற்பட்ட ஏக்கர் காணிகளில் மக்கள் வேளாண்மை செய்து வந்தனர்.

இதனால் அதற்கான உள்ளீடுகளைக் கொண்டுசெல்வதிலும், அறுவடையின் பின் நெல்மணிகளைக்கொண்டுவருவதிலும் மக்கள் பல்லிடர்களை சந்தித்தனர்.

முன்னர் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் இவ்விடர்பாடுகளை மக்கள் என்னிடம் தெரிவித்திருந்தனர். 

இந்த பாலத்தினுடைய மறுசீரமைப்பின் தேவையை வலியுறுத்தி, கடந்த 2016.02.24ஆம் திகதி அன்று அப்போதைய விவசாய அமைச்சரிடம் எழுத்து மூலம் கடிதம் ஒன்றை கையளித்தேன்.

மேலும் இது தொடர்பாக பலதடவைகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்ததன் பயனாக, குறித்த வேலைத்திட்டத்திற்காக 

வடமாகாணசபையானது 2017ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டில் மூன்றரை மில்லியன் உரூபாயினை ஒதுக்கியது.

பின்னர், கடந்த 2017.04.07 அன்று நடைபெற்ற இந்த பாலத்தினுடைய அடிக்கல் நாட்டு விழாவில் காதலியார் சம்மளங்குளம் கமக்கார அமைப்பினரால் இப்பாலத்தில் இருந்து 

ஒட்டுசுட்டான் - நெடுங்கேணி நடுவீதிக்கான வீதியை சீரமைத்து தருமாறு கோரிக்கை கடிதம் ஒன்று கிடைக்கப்பெற்றது. 

அதற்கமைய உழவர்களின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி குறித்த 750மீற்ரர்  வீதியையும் சீரமைக்குமாறு எழுத்து மூலம் உரிய தரப்பினருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருந்தேன்.

கடந்த ஆண்டு 2017.11.24ஆம் நாளன்று குறித்த மறுசீரமைப்பு பணிகளைப் பார்வையிடச்சென்றிருந்தேன்.

 பாலத்தினுடைய மறுசீரமைப்புப்பணி முற்றாக நிறைவடைந்திருந்தது.

வீதியினுடைய சீரமைப்புப்பணிகள் நடை பெற்று அப்போதைய காலநிலை காரணமாக இடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதையும் பார்வையிட முடிந்தது.

இந்த நிலையில் அந்தப்பகுதி மக்களும், பொது அமைப்புக்களும் அழைப்பு விடுத்திருந்த நிலையில் கடந்த 2018.07.21 அன்று குறித்த மறுசீரமைப்பு வேலைகளை அப்பகுதி மற்றும் பொது 

அமைப்புகளுடன் இணைந்து பார்வையிட்டேன். மறுசீரமைப்பு வேலைகள் முற்றாக நிறைவடைந்துள்ளன. 

அத்துடன் பின்தங்கிய இந்த கிராம மக்களுடைய பெரியதோர் பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுத்திருப்பதில் நெஞ்சம் நிறைகின்றது என்றார்.

மேலும், சேதமடைந்து காணப்பட்ட பாலமும் அதனோடு இணைந்த வீதியும் சீரமைக்கப்பட்டதில் அவ்வூர் மக்களும் பொது அமைப்புகளும் தமது நன்றிகளையும், மகிழ்ச்சியையும் தெரிவித்தனர். 

அதனைத்தொடர்ந்து மக்களின் குறைகளும் கேட்டறியப்பட்டன. மின்சாரம் பெற்றுத் தருதல், ஆனைப் பிரச்சினை, கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரை, 

வீதி அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளும் குறைகளும் மக்களால் முன்வைக்கப்பட்டன.





பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு