வடமாகாண தொண்டா் ஆசிாியா்கள் 457 பேருக்கு நிரந்தர நியமனம்...

ஆசிரியர் - Editor
வடமாகாண தொண்டா் ஆசிாியா்கள் 457 பேருக்கு நிரந்தர நியமனம்...

வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் 457 பேருக்கு இன்று நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த பல ஆண்டுகளாக தொண்டர் ஆசிரியர்களாக பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொண்ட இந்த ஆசிரியர்களுக்கு இன்று நிரந்தர நியமனங்கள் வழக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மத்திய கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் யாழ் இந்துக்கல்லூரியின் கேட்போர் கூடத்தில் வைத்து இந்த ஆசிரியர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

ஆசிரியர்களுக்கான நியமனக்கடிதங்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்,மத்திய கல்வி அமைச்சர் அகிலவிராச் காரியவசம்,சிறு கைத்தொழில் அமைச்சர் காதர் மஸ்தான்,

அமைச்சர் ரிசாட் பதியுதீன்,வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி சர்வேஸ்வரன்,வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சத்தியசீலன்,வடக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் உதயகுமார் உள்ளிட்ட பலர் வழங்கினர்