SuperTopAds

ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் ஏ.சி.எம். சஹில்

ஆசிரியர் - Editor III
ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் ஏ.சி.எம். சஹில்

 ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் முன்னாள்  சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் ஏ.சி.எம். சஹில் 

 மலரும் இப் புனிதப்பெருநாள் இம்மண்ணில் அமைதியையும் நிம்மதியையும் சுபீட்சத்தையும் சுமந்து வரவேண்டுமென பிரார்த்தின்றேன்.சாதி, மத பேதமின்றி இலங்கையர்கள் என்ற வகையில் நாம் அனைவரும் எதிர்கொண்ட இக்கட்டான காலகட்டத்தை கடந்து நாட்டில் நல்லதொரு சூழல் உருவாகியுள்ள இவ்வேளையில் எமது சக முஸ்லிம்களுக்கு ரமழான் பண்டிகையை மகிழ்ச்சியாகக் கொண்டாடும் வாய்ப்பு இந்த வருடம் கிடைத்துள்ளதையிட்டு நான் ஆனந்தமடைகின்றேன்.இம்முறை புனித ரமழான், நாட்டுக்கு விஷேடமாக சம்மாந்துறை மக்களுக்கு தேர்தல் ஒன்றினூடாக நல்ல தலைமைத்துவம் ஒன்றை தேர்ந்தெடுக்க சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது. நாட்டு மக்களும் குறிப்பாக சம்மாந்துறை மக்களும் அவர்களுக்கான சிறந்த தலைமைத்துவம் ஒன்றை தேர்ந்தெடுப்பார்கள்  என முன்னாள்  சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேச சபையின் தேசிய காங்கிரஸ் சார்பில் 2025 ஆண்டு உள்ளுராட்சி மன்ற தேர்தலில்  வீரமுனை வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளருமான ஏ.சி.எம். சஹில்  தெரிவித்துள்ளார்.

அவர் அனுப்பி வைத்துள்ள நோன்புப் பெருநாள் செய்தியில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அதில்  தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

இறுதி வேதமான அல்-குர்ஆன் அருளப்பெற்ற சங்கைமிகு ரமழான் மாதத்தில் உலகளாவிய ரீதியில் உள்ள இரண்டு பில்லியன் அளவிலான முஸ்லிம்களும் அல்-குர்ஆனை மனனமிட்டும் பார்த்தும் மஸ்ஜிதுகளிலும் வீடுகளிலும் தொழுகைகளின்போதும் அதிகம் ஓதியும் செவிமடுத்தும் அதனுடனான தொடர்பைப் பேணிவந்தோம்.

தங்களது ஆன்மீக மேம்பாட்டிற்காக உடலாலும் உள்ளத்தாலும் பொருளாலும் நோன்பு நோற்று திக்ர்களில் ஈடுபட்டு ஸகாத் ஸதகாக்களை வழங்கி இரவு வணக்க வழிபாடுகளிலும் ஈடுபட்டு அல்லாஹு தஆலாவின் அன்பையும் மன்னிப்பையும் நரக விடுதலையையும் ஆதரவு வைத்தவர்களாக ஈதுல் ஃபித்ர் நோன்புப் பெருநாளை அடைந்திருக்கிறோம்.ரமழான் மாதம் முழுவதும் நீங்கள் கடைப்பிடித்த நோன்பும், பக்தியும், இரக்கமும், சமூக ஒற்றுமையையும் விளக்குகிறது. இத்தகைய நேரம் பகிர்ந்தளிக்கவும், ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கவும், சமூக ஒற்றுமையை வலுப்படுத்தவும் ஒரு அரிய சந்தர்ப்பமாக அமைகிறது.

இந்நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகின்ற அனைத்து முஸ்லிம்களுக்கும்   ஈதுல் ஃபித்ர் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.இந்நாட்டில் ரமழான் நோன்பு காலத்தை முஸ்லிம்களுக்கு மட்டுமன்றி, அனைவரும் தமது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளும் காலமாக கருதுவதே சரியானதென நான் நினைக்கிறேன்.

தனிமனித முன்னேற்றத்தைப் பொருட்படுத்தாமல், கூட்டுச் சமூக விழுமியங்களை உயர்த்துவதற்காக உருவாக்கப்படும் இவ்வாறான விடயங்கள், வீழ்ச்சியடைந்த இலங்கைப் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கும், நாட்டை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்வதற்குமான கூட்டு முயற்சிக்கான அடிப்படையை வழங்கும் என்றும் நான் நம்புகிறேன்.

அர்ப்பணிப்பு, சுயக்கட்டுப்பாடு, சகிப்புத்தன்மை உள்ளிட்ட ரமழானில் முன்னிலைப்படுத்தப்படும் விழுமியங்கள், அதை நோக்கிய பயணத்தில் சரியான வழிகாட்டியாக அமையும் என்ற எதிர்பார்ப்புடன், இலங்கை வாழ் முஸ்லிம் மக்களுக்கும், முழு உலக முஸ்லிம் சமூகத்திற்கும் சமாதானம், நல்லிணக்கம் நிறைந்த இனிய ரமழான் பெருநாளாக அமைய இதயப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.