சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு

சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு
சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல் முஹம்மது ஹனீபா தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் திங்கட்கிழமை (17) நடைபெற்றது.
சமூக நல்லிணக்க இப்தாராக இடம்பெற்ற இந்நிகழ்வில் நோன்பின் மாண்புகளை பற்றி சம்மாந்துறை ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவர் மெளலவி எம்.எல்.எம் பஷீர்(மதனி)மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததோடு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.எம் நெளசாத்,முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஐ.எம் மாஹீர்,முன்னாள் அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனீபா, மாவட்ட பிரதம கணக்காளர் ஏ.எம்.எம் மஹ்ரூப்,பிரதம பொறியியலாளர் ஏ.பி.எம் சாஹீர்,மாவட்ட கணக்காளர் ஐ.எம் பாரீஸ,பிராந்திய நீர்பாசன திணைக்கள.பொறியியலாளர் ஆர்.வேல்கஜன்,சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் டாக்டர் டி.பிரபாசங்கர்,அம்பாறை மாவட்ட பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் எச்.பி.அனீஸ், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி எஸ் ஜெயலத் மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலாளர்கள்,உதவி பிரதேச செயலாளர்கள்,கணக்காளர்கள்,பிரதி,உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள் மாவட்ட செயலக உயர் அதிகாரிகள்,திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், வர்த்தக சங்க மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதானிகள், முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வு பிரதேச செயலக நலனோம்பல் அமைப்பின் நெறிப்படுத்தலிலும் ஒழுங்குபடுத்தலிலும் சிறப்பாக நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.