SuperTopAds

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களிற்கு இதுவரை நீதி வழங்கப்படவில்லை!

ஆசிரியர் - Admin
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களிற்கு இதுவரை நீதி வழங்கப்படவில்லை!

யுத்தத்தில் சிக்குண்ட மக்களிற்கான மனிதாபிமான உதவிகள் தடுக்கப்பட்டன மருத்துவமனைகள் மீது விமானக்குண்டு வீச்சு இடம்பெற்றது என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எனினும் இது திட்டமிடப்பட்ட முறையில் பெருமளவில் இடம்பெறவில்லை என தெரிவித்துள்ளார். அல்ஜசீராவிற்கான பேட்டியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

2009ம் ஆண்டு முடிவிற்கு வந்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி வழங்கப்பட்டு விட்டதா என மெஹ்டி ஹசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள ரணில் விக்கிரமசிங்க எந்த சமூகத்திற்கும் இதுவரை நீதிவழங்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்தில் சிக்குண்டிருந்தவர்களிற்கான மனிதாபிமான உதவி தடுக்கப்பட்டது, மருத்துவமனைகள் மீது குண்டுவீச்சு இடம்பெற்றது என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி ஆனால் இது திட்டமிடப்பட்ட விதத்தில் முன்னெடுக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

விமானப்படை விமானங்கள் மருத்துவமனைகள் மீது குண்டுவீசிய தருணங்கள் உள்ளன,இதற்காக அவர்களிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது என தெரிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்க ஆனால் இது பெருமளவில் இடம்பெற்றதா?நான் அப்படி சொல்ல மாட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள மெஹ்டி ஹசன் ஐக்கியநாடுகளின் குழு இலங்கை படையினர் யுத்தத்தில் சிக்குண்டவர்களிற்கான மனிதாபிமான உதவிகளை தடுத்தனர் என குறிப்பிட்டுள்ளனரே என கேள்வி எழுப்பியுள்ளார்.

நான் அது இடம்பெற்றது என நினைக்கின்றேன் என அவ்வேளை எதிர்க்கட்சி தலைவராகயிருந்த ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.