கல்முனை அல்-பஹ்ரியா மகா வித்தியாலய க.பொ.த சாதாரண மாணவர்கள் தினம்

கல்முனை அல்-பஹ்ரியா மகா வித்தியாலய க.பொ.த சாதாரண மாணவர்கள் தினம்
கல்முனை அல்-பஹ்ரியா மகா வித்தியாலய க.பொ.த சாதாரண மாணவர்கள் தினம் 2024-2025 மகிழ்ச்சி மற்றும் கண்ணீர் தொனிப்பொருளில் சிறப்பாக கடந்த புதன்கிழமை(19) அன்று பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது!
குறித்த நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.ஏ.சலாம் தலைமையில் அல்-பஹ்ரியா மகா வித்தியாலயம் தரம் 11 பகுதி தலைவர் எம்.வை.எம். யூசுப் இம்ரானின் நெறிப்படுத்தலின் கீழ் நடைபெற்றது.
இதில் பிரதம விருந்தினராக நெனசல பயிற்சி நிலைய பணிப்பாளர் எஸ்.எம் ஹாஜா கலந்து சிறப்பித்தார்.
மேலும் நிகழ்வின் முக்கிய உரையாளராக அஷ் ஷேக் அக்ரம் அபூபக்கர் (நளீமி) கலந்து கொண்டார்.ஏனைய விருந்தினர்களாக அர்சாத் முகமது அக்ஷான், ரினோஸ் ஹஜ்மின், திருமதி யு.எல். ஹிதாயா , திருமதி எம்.எப் நஸ்மியா புகாரி, ஏ.ஆர்.எம். முசாஜித், உட்பட சிறப்பு அழைப்பாளர்களாக ஏ.ஆர்.எம் ஹிம்சாத், திருமதி எம்.எச் அரிஃபா ஷிப்லி ஆசிரியர்கள், பெற்றோர் சங்க உறுப்பினர்கள் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவின் சிறப்பம்சமாக மாணவர்களுக்கான முக்கிய ஆலோசனைகளும் பரீட்சை வெற்றிக்கான வழிகாட்டுதல்களும் அஷ் ஷேக் அக்ரம் அபூபக்கரால் (நளீமி) வழங்கப்பட்டது .
மேலும் மாணவர்களின்கலை கலாசார நிகழ்வுடன் சிறப்பான ஒழுங்கமைப்பில் நிகழ்ச்சி நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.