எரிகாயம் அடைந்த சாவகச்சேரி உதவிப் பிரதேச செயலாளர் தமிழினி மரணம்!

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி உதவி பிரதேச செயலாளர் தமிழினி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அண்மையில் தீயில் எரிந்த நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த உதவி பிரதேச செயலாளர் தமிழினி நேர்மையாக துடிப்புடன் மிகச் சிறந்த சேவைகளை சாவகச்சேரி பகுதி மக்களுக்கு வழங்கி வந்தவர் என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.