SuperTopAds

தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் உருவாக வேண்டும்!

ஆசிரியர் - Admin
தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் உருவாக வேண்டும்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பு கட்டாயம் மீண்டும் உருவாக வேண்டும் என ஜனநாய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

“தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாகாமல் விட்டால் இன்றைக்கு இருக்கின்ற சூழலே தொடர்ச்சியாக நீடிக்கும். அதாவது பிரதேச சபைகளை, மாகாண சபைகளை ஏனையவர்கள் கைப்பற்றுவார்கள். அதன்பிறகு எங்களுடைய தேசியம் என்பது அங்கே இல்லாமல் போய் விடும். இப்பொழுதே தேசியம் என்பது அரிதாகிக் கொண்டு செல்கின்றது.

தற்போதைய அரசாங்கம் வடக்கு கிழக்கிலுள்ள பிரதேச சபைகள் மற்றும் நகர சபைகளை கைப்பற்றுவதற்காக திட்டமிட்டு செயற்படுகின்றது.

எங்களுக்கிடையில் ஒற்றுமையின்மையால் அவர்கள் பிரதேச சபைகள் மற்றும் நகர சபைகளை கைப்பற்றினால் மாகாண சபையையும் கைப்பற்றுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது.

ஆகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு மீண்டும் உருவாக்கப்பட வேண்டும். அதற்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்குவதற்கு தயாராக இருக்கின்றோம்.” என அவர் மேலும் தெரிவித்தார்.