வேக கட்டுப்பாட்டை இழந்து வயலுக்குள் பாய்ந்த கார்!- இளங்குமரன் எம்.பி காயம்.

யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளாகி, படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி - தனக்கிளப்பு பகுதியில் இந்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. வேகக்கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வயலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.