SuperTopAds

மக்களின் காணி மக்களுக்கே சொந்தம் - தையிட்டி போராட்டத்தில் ஈ.பி.டி.பி. வலியுறுத்தல்

ஆசிரியர் - Admin
மக்களின் காணி மக்களுக்கே சொந்தம் - தையிட்டி போராட்டத்தில் ஈ.பி.டி.பி. வலியுறுத்தல்

தையிட்டி காணி அளவீடு செய்யப்படும் நோக்கம்  தொடர்பில் எம்மவர்கள் சிலரிடம் காணப்பட்ட புரிதலின்மையைால் தையிட்டி விகாரையை சூழவுள்ள தனியார் காணிகளை கடந்த அரசாங்க காலத்தில் விடுவிக்க முடியாமல் போய்விட்டதாக தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர்  ஸ்ரீகாந் பன்னீர்செல்வம், மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கும் போராட்டங்களூக்கும்  கட்சின்  பூரண ஓத்துழைப்பு கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்

தையிட்டி விகாரை  அமைந்துள்ள காணி உரிமையாளர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட கவன ஈர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

தையிட்டி விகாரை என்பது, எந்தவிதமான சட்ட  ரீதியான அனுமதிகள் எதனையும் பெற்றுக்கொள்ளாமல்  எமது மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த காணிகள் அமைக்கப்பட்டுள்ளது.

மக்களின் காணிகள் மக்களுக்கே சொந்தம் என்ற எமது   செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தாவின் திடமான சிந்தனையின் அடிப்படையில், வடக்கு கிழக்கு பகுதிகளில் தொல்லியல் திணைக்களத்தினாலும், வனவளத் திகை்களத்தினாலும், வனஜீவராசிகள் திதைக்களம் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காவும் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பதற்கும் எம்மால் கடந்த காலங்களில் பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கின்றது.

அவ்வாறான நிலையில், கடந்த அரசாங்கத்தில் அமைச்சராக செயற்பட்டிருந்த எங்கள் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்த காணி உரிமையாளர்கள் தங்களின் காணி விடுவிப்பு தொடர்பான கோரிக்கையை முன்வைத்தனர்.

அதனடிப்படையில் சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு உடன்பாடும் எட்டப்பட்டிருந்தது.

அதனடிப்படையில், முதற்கட்டமாக அந்தக் காலப்பகுதியில் எமது விகாரைக்கான கட்டுமானங்கள் அமைக்கப்பட்டிருந்த சிறிய பகுதியை தவிர, ஏனைய காரணிகளை உரிமயாளர்களிடம் கையளிப்பதற்கு சம்மந்தப்பட்ட தரப்புக்கள் இணக்கம் தெரிவித்திருந்தன.

இந்நிலையில் காணிகளை விடுவிப்பதற்கான நில அளவீட்டுப் பணிகளை மேற்கொள்வதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், எம்மவர்கள் சிலர் மத்தியில் காணி அளவீட்டின் நோக்கம் தொடர்பான புரிதல்  இன்மை காணரமாக அளவீட்டு பணிகளை இடைநிறுத்த வேண்டி ஏற்பட்டது. 

அக்காலப் பகுதியில் தொடர்ச்சியாக தேர்தல்கள் அறிவிக்கப்பட்டு ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டமையினால், அந்த செயற்பாட்டை எம்மால் பூரணப்படுத்த முடியவில்லை.

கடந்த காலங்களில் தேசிய நல்லிணக்க வழிமுறை ஊடாக எவ்வளவோ மக்கள் நலன்சார்ந்த பிரச்சனைகளை அணுகி வெற்றி கண்டிருந்தோம்.

தற்போது அதிகாரத்தில் இல்லாத நிலையில், எமது மக்களின் எதிர்ப்பார்ப்புக்ளை தீர்ப்பதற்காக அழுத்தங்களை பிரயோக்கிக்க வேண்டிய கடப்பாடு எமக்கு இருக்கின்ற நிலையில்,  தையிட்டி  காணி உரிமயைாளர்களின் அழைப்பை ஏற்று இன்றைய கவன ஈர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கின்றோம். என்று தெரிவித்துள்ளார்.