SuperTopAds

அர்ச்சுனா எம்.பியின் தாக்குதல்! வெளியான சிசிடிவி காணொளி

ஆசிரியர் - Admin
அர்ச்சுனா எம்.பியின் தாக்குதல்! வெளியான சிசிடிவி காணொளி

பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா பீங்கானால் நபரொருவரை தாக்கிய விதம் சி.சி.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளது. 

தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்த நபர் தற்போது அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்று (11) இரவு அர்ச்சுனாவுக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் மோதலாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாராளுமன்ற உறுப்பினர் தனது கையடக்க தொலைபேசியில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தபோது, ​​அதை எதிர்த்த இரண்டு நபர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

அந்த நேரத்தில், பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, ஒருவரை பீங்கானால் தாக்கியுள்ளதுடன், அந்த சம்பவம் அங்கு பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளது. 

இருப்பினும், எமது செய்தி சேவை விசாரித்தபோது, ​​பாராளுமன்ற உறுப்பினரும் தாக்கப்பட்டதாகக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.