SuperTopAds

மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்படும்: அமைச்சர் சந்திரசேகர்

ஆசிரியர் - Admin
மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்படும்: அமைச்சர் சந்திரசேகர்

அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தின் கீழ்வரும் மாகாண சபை முறைமை நீண்டு நிலைக்கக்கூடிய நிரந்தரத் தீர்வு என நாம் நம்பவில்லை. எனினும், மாகாண சபை முறைமையைத் தமக்கு கிடைத்த உரிமையாகத் தமிழ் மக்கள் நம்புவதால் அந்த உரிமையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கைவைக்காது என்று யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும் கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

சீனா – இலங்கை நட்புறவின் பயனாக “சீனாவின் சகோதர பாசம்” எனும் வாசகத்துடன் யாழ். மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சீனாவின் உதவியில் உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்ட நேற்றைய (10/2/2025) நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“மாகாண சபை முறைமையை அர்த்தமுள்ள முறைமையாக மாற்றியமைப்போம். இவ்வருடத்துக்குள் அல்லது அடுத்த வருடம் முற்பகுதியில் அதற்கான தேர்தல் நடத்தப்படும். சிறுபான்மையின மக்கள் உட்பட நாட்டு மக்களின் உரிமைகளை நிலைநாட்டுகின்ற புதிய அரசமைப்பு கொண்டுவரப்படும்” என்றார்.