SuperTopAds

அடுத்த மாகாணசபை அமையும்வரை நானே அவைத்தலைவர்..

ஆசிரியர் - Editor I
அடுத்த மாகாணசபை அமையும்வரை நானே அவைத்தலைவர்..

வடக்கு மாகாண சபை நிறைவு நாளான ஒக்டோபர் 25 வரை மட்டுமல்ல அடுத்த மாகாணசபை அமையும் வரை நானே அ வைத்தலைவர் என அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கூறியுள்ளார்.

தற்போதைய  மேன்முறையீட்டுமன்றின் தீர்ப்புக்குக் காரணம் எமது ஆளுநர் அரச வர்த்தமானியில்  டெனீஸ்வரனை நான் நீக்கியது பற்றி பிரசுரிக்காமையே ஆகும்.  

வடமாகாணசபை சார்பாக  ஆளுநர்  தானே ஒரு முக்கியமான செயலைச் செய்யாதுவிட்டு அதை முன்வைத்து வடமாகாணசபையை கலைக்க சட்டம் இடம் கொடுக்காது. என்றும் அவைத்தலைவர் கூறினார்.

தொடர்ந்து எமது பதவிக்காலம் வரையில் அவைத்தலைவராகவே இருக்கலாம். என முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் கூறிய கருத்து தொடர்பாக கேட்டபோதே அவர் இ வ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில்  அவைத் தலைவர் தனது கருத்தை மேலும் தெரிவிக்கையில்,

அவைத் தலைவர் பதவி இருப்பது அல்ல தற்போதைய பிரச்சணை. உண்மையில் தற்போதைய பிரச்சணையானது அமைச்சர் சபை சட்டபூர்வமாக இருக்க வேண்டும் என்பதே பெரும் பிரச்சனை. 

அதேநேரம் வடக்கு மாகாண சபையும் அமைச்சர் வாரியமும்  ஒக்டோபர் 25ம் திகதிவரை மட்டுமே செயல்பட முடியும் . 

ஆனால் அவைத் தலைவர்  அதையும்  தாண்டிய  அடுத்த மாகாண சபை அமையும்  வரையிலும்  நானே அவைத்தலைவர் என்றார்.