முடிவெடுக்காத சம்பந்தன்! தனித்துக் குதிக்கும் வரதர் அணி!
வரதராஜப் பெருமாள் தலைமையிலான ஈ.பி.ஆர். எல். எவ். வரதர் அணி சாவகச்சேரி நகரசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதற்கு நேற்றுக் கட்டுப்பணம் செலுத்தியுள்ளது. யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் உள்ள தேர்தல் பணியகத்தில், நேற்றுப் பிற்பகல் அ.வரதராஜப்பெருமாள் மற்றும் சுகு சிறிதரன் ஆகியோர் கட்டுப்பணத்தைச் செலுத்தினர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப் பில் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ். இணைத்துக்கொள்ளப்பட உள்ளதாகவும், உள்ளூராட்சித் தேர்தலில் கூட்டமைப் புடன் இணைந்து போட்டியிடவுள்ளதாகவும், தகவல்கள் வெளியாகியிருந்தன.
ஆனாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பில் இந்தக் கட்சியை இணைத் துக் கொள்வது தொடர்பாக கூட்டமைப்புத் தலைமை இன்னமும் எந்த முடிவையும் அறிவிக்காத நிலையில், தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதாக, பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ். தெரிவித்துள்ளது.
முதற்கட்டமாக சாவகச்சேரி நகரசபைக்கு இந்தக் கட்சி சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
குறித்த அணி தமது கட்சியின் பெயரை தமிழ் சமூக ஜனநாயகக் கட்சி என்று மாற்றிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.