SuperTopAds

104 கிலோகிராம் கேரள கஞ்சா பொதிகள் மீட்பு!

ஆசிரியர் - Admin
104 கிலோகிராம் கேரள கஞ்சா பொதிகள் மீட்பு!

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் 104 கிலோகிராம் கேரள கஞ்சாவை இரண்டு படகுகளில் கடத்தி வந்த மூன்று பேர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம் உதயபுரம் பகுதி கடற்பரப்பில் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் இன்று கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

உதயபுரம் பகுதியை சேர்ந்த 24,25,27 வயதான மூன்று இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் சந்தேக நபர்களை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.