SuperTopAds

உடுவில் மகளிர் கல்லூரி வலிகாம வலயத்தில் முதலிடம்.!

ஆசிரியர் - Admin
உடுவில் மகளிர் கல்லூரி வலிகாம வலயத்தில் முதலிடம்.!

வெளியாகிய புலமைப் பரிசில் பரீட்சையில் உடுவில் மகளிர் கல்லூரியில் 61 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தி அடைந்து சாதனை படைத்ததுடன் குறித்த பாடசாலை தொடர்ந்து வலிகாம வலயத்தில் முதல்நிலை பாடசாலையாக மிளிர்ந்து வருகின்றது.

உடுவில் மகளிர் கல்லூரியில் 160 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் 61 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றனர். அத்துடன் 81 மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேலும், 18 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேலும் பெற்று 100 வீத சித்தியினை அடைந்து சாதனை படைத்துள்ளனர்.

குறித்த பாடசாலையானது இவ்வாறு சாதனை புரிவதற்கு வழிவகுத்த அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மாற்றும் பெற்றோருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.