தொழுகை (இறை) வணக்கத்தில் வெள்ள நீர் பரவலிலும் ஈடுபடும் மீட்பு பணியாளர்
தொழுகை (இறை) வணக்கத்தில் வெள்ள நீர் பரவலிலும் ஈடுபடும் மீட்பு பணியாளர்
கிட்டங்கி வீதி அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள நீர் பரவல் காரணமாக அப்பகுதியால் பயணம் செய்பவர்கள் பாதுகாப்பாக மீட்டு அறிவுறுத்தல் வழங்கி உதவி வருகின்ற மீட்புப்பணியாளர் இறைவணக்கம் அவ்விடத்தில் மேற்கொண்டமை பலரது கவனத்தை ஈர்த்தது.
இன்று (21) கல்முனை மாநகரையும் நாவிதன்வெளி பெரு நிலப்பரப்பையும் இணைக்கும் கிட்டங்கி தாம்போதிக்கு மேலாக வெள்ளம் பாய்வதால் போக்குவரத்து கட்டுப்பாட்டுடன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.இதற்காக கடந்த இரண்டு நாட்களாக கல்முனை ஆழ்கடல் சுழியோடி அணியினர் தன்னார்வமாக அப்பகுதிக்கு வருகை தந்து சிரமப்படும் மக்களுக்கு உதவி வருகின்றனர்.
இதனடிப்படையில் தொழுகை நேரம்(இறை வணக்கம் ) வந்தவுடன் வெள்ள நீர் அச்சுறுத்தலுக்கும் மத்தியில் உரிய பாதுகாப்பு உடையுடன் தமது சமயக் கடமைகளில் ஈடுபட்டமை அப்பகுதியினால் பயணம் செய்த அனைவரதும் கவனத்தை ஈர்த்தது.
குறித்த கல்முனை ஆழ்கடல் சுழியோடி அணியினர் அண்மைக் காலமாக அம்பாறை மாவட்டம் உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் மனித உயிர்களுக்கு மதிப்பளித்து அனர்த்த காலங்களில் தன்னார்வமாக உதவி வருவதுடன் அப்பகுதி மக்களின் அபிமானத்தையும் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மிக குறைந்த வளங்களுடனும் ஆளனி வளமற்றும் இயங்கும் இவர்கள் தமது தொழிலையும் அன்றைய தினம் தியாகம் செய்து இவ்வாறான செயற்பாடுகளுக்கு உதவுகின்ற இத்தன்னார்வ அமைப்பு என்பதுடன் இவ்வாறானவர்களுக்கு உதவ தனவந்தர்கள் உரிய தரப்பினர் முன்வர வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கிட்டங்கி தாம்போதியில் வெள்ளம் பாய்வதுடன் கல்முனை சேனைக்குடியிருப்பு நாவிதன்வெளி சவளக்கடை பிரதேசங்களை தரை வழியாக இணைக்கின்ற கிட்டங்கி பாலாமானது அதிகரித்த ஆற்றின் நீர்மட்டம் காரணமாக இராணுவம் பொலிஸார் நாவிதன்வெளி பிரதேச செயலகம் பிரதேச சபை அனர்த்த முகாமைத்துவ குழு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இது தவிர கல்முனை ஆழ்கடல் சுழியோடி அணி இரண்டு நாட்களாக அப்பகுதி ஊடாக பயணம் செய்கின்ற அரச மற்றும் தனியார் அதிகாரிகள் மாணவர்களை பாதுகாப்பாக பயணம் செய்வதற்கு உதவி செய்வதுடன் தன்னார்வமாக தனது சேவைகளை முன்னெடுத்து வருவதுடன் அப்பகுதியில் பயணம் செய்ய சிரமப்படும் பொதுமக்களை இனங்கண்டு நடவடிக்கைகளை எடுத்துள்ளதை காண முடிகின்றது.
சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் வெள்ளம் பரவலாக காணப்படுவதுடன் சில இடங்களில் வடிந்தோடி காணப்படுகின்றது.தினமும் விவசாயிகள் அலுவலக உத்தியோகத்தர்கள் இ பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் நாளந்தம் பயணிக்கும் இவ்வீதியில் வெள்ள நீர் பரவி வருவதால் பிரதேச மக்கள் பல்வேறு கஸ்டங்களுக்கு மத்தியில் தமது அன்றாட பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ் வீதிக்கான நிரந்தர பாலம் அமைக்குமாறு நீண்டகாலமாக பிரதேச மக்களினால் விடுக்கப்படும் கோரிக்கையை இதுவரைக்கும் எந்த அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
* தன்னார்வ பணியின் இடையே, தொழுகை மேற்கொண்ட தொண்டர்
அம்பாறை மாவட்டம் -கிட்டங்கி வீதி நீரில் மூழ்கிய நிலையில், மக்கள் பாதுகாப்பாக வீதியைக் கடப்பதற்கு உதவும் வகையில், பலரும் தன்னார்வ பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன்போது, கல்முனை ஆழ்கடல் சுழியோடி தன்னார்வ பணியாளர் ஒருவர், பணிகளின் நடுவே, இறை தொழுகையில் ஈடுபட்டிருந்தார்.