SuperTopAds

மருதங்கேணி பொலிசாரால் இரண்டு பெண்கள் கைது- மேலும் இருவருக்கு அழைப்பு!

ஆசிரியர் - Admin
மருதங்கேணி பொலிசாரால் இரண்டு பெண்கள் கைது- மேலும் இருவருக்கு அழைப்பு!

யாழ்.வடமராட்சி கிழக்கு மருதங்கேணி தனியார் நிறுவனத்தில் அடகு வைக்கப்பட்டுள்ள ஒருதொகை நகைகள் களவு போன சம்பவம் தொடர்பில் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் மேலும் இருவர் சற்றுமுன் மருதங்கேணி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரூபா 2 250 000/= பெறுமதியான தங்க நகைகள் மாயமானது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் மேலும் இருவர் சற்றுமுன் கைது செய்யப்பட்டதுடன் நாளை நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

நகைகள் மாயமானது குறித்து தமக்கு எதுவும் தெரியாதென கூறிவரும் குறித்த நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் உண்மையான குற்றவாளியை பொலிசார் கண்டறிந்து தமக்கு நீதியை பெற்றுத்தர வேண்டுமென தெரிவித்து வந்த நிலையில் இரண்டு யுவதிகள் மீண்டும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.