நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனை கைது செய்யுமாறு அதிரடி உத்தரவு
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனை கைது செய்யுமாறு அநுராதபுரம் நீதிமன்றம் சற்று முன்னர் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்து சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அனுராதபுரம் பகுதியில் போக்குவரத்து பொலிஸாரின் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக தெரிவித்து அர்ச்சுனா தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
அத்துடன், இது தொடர்பான ஆதாரங்களையும் பொலிஸார் நீதிமன்றில் சமர்ப்பித்திருந்தனர். இதன் அடிப்படையில் நாடாளுமன்றr உறுப்பினர் அர்ச்சுனாவை கைது செய்யும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.