SuperTopAds

உணவகம் மற்றும் பூட்சிற்றி உரிமையாளர்களிற்கு எதிராக தண்டம் விதிப்பு!

ஆசிரியர் - Admin
உணவகம் மற்றும் பூட்சிற்றி உரிமையாளர்களிற்கு எதிராக தண்டம் விதிப்பு!

நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையின் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் நிர்மலானந்தனின் வழிகாட்டலிலும் ஆலோசனையிலும், பண்டிகை காலத்தினை முன்னிட்டு உணவகங்கள், பூட்சிற்றிகள் என்பன தொடர்ச்சியாக பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் தலைமையிலான குழுவினரால் கடந்த 07ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது திருநெல்வேலி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் சமையல் செய்வதற்காக திகதி காலாவதியான பொருட்கள், சுட்டுத்துண்டு இன்றிய பொருட்கள் பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டு, மேற்படி பொருட்கள் கைப்பற்றப்பட்டதுடன் பாற்பண்ணை பகுதியில் அமைந்துள்ள பூட்சிற்றியிலும் ஏராளமான திகதி காலாவதியான பொருட்கள், சுட்டுத்துண்டு இன்றிய பொருட்கள் பொது சுகாதார பரிசோதகரால் கைப்பற்றப்பட்டது.

குறித்த உணவகம் மற்றும் பூட்சிற்றி உரிமையாளர்களிற்கு எதிராக மேலதிக நீதிவான் நீதிமன்றில் நேற்று திங்கட்கிழமை(20)வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. வழக்குகளை நேற்றையதினமே விசாரணைக்கு எடுத்துகொண்ட மேலதிக நீதிவான் செ. லெனின்குமார் உணவக, பூட்சிற்றி உரிமையாளர்களிற்கு முறையே 1லட்சத்து20ஆயிரம் மற்றும் 1லட்சத்து47ஆயிரம் ரூபா தண்டம் விதித்ததுடன் கடுமையான எச்சரிக்கையும் வழங்கியுள்ளார்.