SuperTopAds

யாழில் பிறந்த குழந்தை ஒன்று கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு.!

ஆசிரியர் - Admin
யாழில் பிறந்த குழந்தை ஒன்று கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு.!

இன்றையதினம் பிறந்த குழந்தை ஒன்று கிணற்றினுள் வீசப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கைதடி பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது.

இது குறித்து சந்தேகநபர்கள் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை.

இச்சம்பவம் குறித்து சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் கிணற்றில் இருந்து சிசுவின் சடலம் மீட்பு – குழந்தையின் தாயார் கைது!

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கைதடி தென்கிழக்கு, J/292 கிராமசேவகர் பிரிவுக்குற்பட்ட மூர்த்தியாவத்தை கந்தசாமி கோவில் பகுதியில் உள்ள தோட்டக்கிணற்றில் பிறந்து ஒரு நாளான சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இன்று காலை குறித்த தோட்டத்தில் வேலை செய்வதற்காக வந்தவர்கள் கிணற்றில் நீர் எடுக்க முற்பட்ட வேளை சிசுவின் சடலத்தை பார்த்ததும் கிராம சேவகர் மூலம் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கினர்.

அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் உயிரிழந்த சிசு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதிபதி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சடலத்தை பார்வையிட்டதுடன் பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.

இதே வேளை சாவகச்சேரி பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரி பாலித செனவிரட்னவின் வழிகாட்டலில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் சிசுவை பிரசவித்தவர் என சந்தேகிக்கப்படும் 43 வயதான, 3 பிள்ளைகளின் தாயான பெண் கிளிநொச்சி பகுதிக்கு தப்பிச்செல்ல முற்பட்ட வேளை கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலைக்கு உதவி செய்திருப்பார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் குறித்த பெண்ணின் தாய் மற்றும் சகோதரியையும் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

//let deferredPrompt; // //window.addEventListener('beforeinstallprompt', function(event) { // // Prevent Chrome 67 and earlier from automatically showing the prompt // event.preventDefault(); // // Stash the event so it can be triggered later. // deferredPrompt = event; //}); // Installation must be done by a user gesture! Here, the button click /* if(btnAdd) { btnAdd.addEventListener('click', (e) => { // hide our user interface that shows our A2HS button btnAdd.style.display = 'none'; // Show the prompt deferredPrompt.prompt(); // Wait for the user to respond to the prompt deferredPrompt.userChoice .then((choiceResult) => { if (choiceResult.outcome === 'accepted') { console.log('User accepted the A2HS prompt'); } else { console.log('User dismissed the A2HS prompt'); } deferredPrompt = null; }); }); } */ //$('a.logo-link').append('
');